மனித அறிவியல் நிலையற்றது. தான் கொண்ட கொள்கையில் நிலையில்லாமல் மாறிக் கொண்டே இருப்பதுதான் இந்த மனித அறிவியல். இதன் வளர்ச்சி உயர்ந்து கொண்டிருப்பது உண்மையென்றாலும், அது மனித வர்க்கம் அழியும் வரை அதன் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டே இருக்கும்.
ஆனால், இவ் அண்டத்தின் அறிவியல் வளர்ச்சியடைகிறது என்பது உண்மையென்றால் அதுதான் இல்லை. இவ் அண்டத்தின் அறிவியல் என்றென்றும் நிலையானது. அதன் வளர்ச்சி முழுமையடைந்த ஒன்றாகும். இதை மனிதன் தன்னுடைய அறிவிற்கு ஏற்ப சிருக சிருக முயன்று அறிவியலின் ஒவ்வொரு கட்டத்தை தாண்டி மேல் நோக்கி முன்னேறி வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றான்.
ஒவ்வொரு மனித அறிவியல் கண்டுபிடிப்புகளும், அதற்கு முன் உள்ளவைகளைக் காட்டிலும் உயர்தரத்திலும், இலகுவாக பயன்படுத்தும் விதத்திலுமே அமையப்பட்டிருக்கும். ஆனால், அவன் கண்டுபிடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்தும் இவ் அண்டத்தில் என்றென்றும் உள்ளவைகளைக் கொண்டே கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
இதைப்போன்றே இறைவன் என்பவன் நிலையானவன். அவன் எந்த ஒரு மாற்றத்திற்கும் உட்பட்டவனல்ல. ஆனால், மனிதர்கள் அந்த இறைவனை அறிவதற்காண அறிவு வளர்ச்சி முழுமைப் பெற்றவர்களாக இல்லை. இதை மக்கள்தான் சரியாக உணர்ந்து புரிந்துக் கொள்ளவேண்டும்.
உதாரணமாக மனிதன் வாழக்கூடிய உலகத்தைப்பற்றி இஸ்லாமிய மார்க்கம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.
2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான், (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
பூமி விரிப்பாக என்பதை அக்கால மக்கள் தங்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப விரிப்பு என்பதன் விளக்கமாக ஒரு விரிப்பு எப்படி தட்டையாக உள்ளதோ அதைப்போன்றுதான் இந்த உலகமும் தட்டையாக உள்ளது என்று புரிந்துக் கொண்டனர்.
ஆனால், கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் அறிவுத்திறன் வளர்ச்சியின் விளைவாக உலகம் தட்டையாக இல்லாமல் உருண்டையாக இருப்பதைக் கண்டறிந்தவுடன், விரிப்பு என்பதற்கான அர்த்தத்தை ஆராய்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர்களின் அறிவிற்கு புலப்பட்டது என்னவென்றால் வாழ்விடம் என்ற பொருளை கண்டறிந்தனர்.
இந்த அர்த்தத்தைக் கொண்டு மற்றைய கோள்களை ஆராயும் பொழுது அது மக்கள் வாழ்வதற்கு உகந்ததாக இல்லை. இந்த பூமி மட்டுமே மக்கள் வாழ்வதற்கு தகுந்ததாக உள்ளது. எனவே இறைவனின் கூற்றுப்படி விரிப்பு என்பதன் பொருள் வாழ்விடம் என்பதாகும் என ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.
எப்படி முழுமையடைந்த அறிவியலை மனித அறிவியல் கண்டறிந்துக் கொண்டு உள்ளதோ, அதைப்போலவே முழுமையடைந்த மதம் அல்லது மார்க்கத்தை மக்கள் தங்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப தெளிவாக விளங்கியபடி உள்ளனர்.
அதனால் சகோதரர்களே... அறிவியல் எப்படி ஆராய்ச்சிக்கு உட்பட்டதோ, அதேப்போன்றுதான் மார்க்கமும் (மதம்) ஆராய்ச்சிற்கு உட்பட்டது. மார்க்கத்தையும் ஆராயுங்கள். அதன் நன்மையான கருத்துக்களை புரிந்துக் கொள்ள முயலுங்கள். வெற்றி உங்களுக்கே.
1 comments:
parisuttham venam vttru
Post a Comment