Wednesday, November 12, 2008

மனித அறிவியல் நிலையற்றது


மனித அறிவியல் நிலையற்றது. தான் கொண்ட கொள்கையில் நிலையில்லாமல் மாறிக் கொண்டே இருப்பதுதான் இந்த மனித அறிவியல். இதன் வளர்ச்சி உயர்ந்து கொண்டிருப்பது உண்மையென்றாலும், அது மனித வர்க்கம் அழியும் வரை அதன் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டே இருக்கும்.

ஆனால், இவ் அண்டத்தின் அறிவியல் வளர்ச்சியடைகிறது என்பது உண்மையென்றால் அதுதான் இல்லை. இவ் அண்டத்தின் அறிவியல் என்றென்றும் நிலையானது. அதன் வளர்ச்சி முழுமையடைந்த ஒன்றாகும். இதை மனிதன் தன்னுடைய அறிவிற்கு ஏற்ப சிருக சிருக முயன்று அறிவியலின் ஒவ்வொரு கட்டத்தை தாண்டி மேல் நோக்கி முன்னேறி வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றான்.

ஒவ்வொரு மனித அறிவியல் கண்டுபிடிப்புகளும், அதற்கு முன் உள்ளவைகளைக் காட்டிலும் உயர்தரத்திலும், இலகுவாக பயன்படுத்தும் விதத்திலுமே அமையப்பட்டிருக்கும். ஆனால், அவன் கண்டுபிடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்தும் இவ் அண்டத்தில் என்றென்றும் உள்ளவைகளைக் கொண்டே கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

இதைப்போன்றே இறைவன் என்பவன் நிலையானவன். அவன் எந்த ஒரு மாற்றத்திற்கும் உட்பட்டவனல்ல. ஆனால், மனிதர்கள் அந்த இறைவனை அறிவதற்காண அறிவு வளர்ச்சி முழுமைப் பெற்றவர்களாக இல்லை. இதை மக்கள்தான் சரியாக உணர்ந்து புரிந்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக மனிதன் வாழக்கூடிய உலகத்தைப்பற்றி இஸ்லாமிய மார்க்கம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.


2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான், (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

பூமி விரிப்பாக என்பதை அக்கால மக்கள் தங்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப விரிப்பு என்பதன் விளக்கமாக ஒரு விரிப்பு எப்படி தட்டையாக உள்ளதோ அதைப்போன்றுதான் இந்த உலகமும் தட்டையாக உள்ளது என்று புரிந்துக் கொண்டனர்.

ஆனால், கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் அறிவுத்திறன் வளர்ச்சியின் விளைவாக உலகம் தட்டையாக இல்லாமல் உருண்டையாக இருப்பதைக் கண்டறிந்தவுடன், விரிப்பு என்பதற்கான அர்த்தத்தை ஆராய்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர்களின் அறிவிற்கு புலப்பட்டது என்னவென்றால் வாழ்விடம் என்ற பொருளை கண்டறிந்தனர்.

இந்த அர்த்தத்தைக் கொண்டு மற்றைய கோள்களை ஆராயும் பொழுது அது மக்கள் வாழ்வதற்கு உகந்ததாக இல்லை. இந்த பூமி மட்டுமே மக்கள் வாழ்வதற்கு தகுந்ததாக உள்ளது. எனவே இறைவனின் கூற்றுப்படி விரிப்பு என்பதன் பொருள் வாழ்விடம் என்பதாகும் என ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

எப்படி முழுமையடைந்த அறிவியலை மனித அறிவியல் கண்டறிந்துக் கொண்டு உள்ளதோ, அதைப்போலவே முழுமையடைந்த மதம் அல்லது மார்க்கத்தை மக்கள் தங்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப தெளிவாக விளங்கியபடி உள்ளனர்.

அதனால் சகோதரர்களே... அறிவியல் எப்படி ஆராய்ச்சிக்கு உட்பட்டதோ, அதேப்போன்றுதான் மார்க்கமும் (மதம்) ஆராய்ச்சிற்கு உட்பட்டது. மார்க்கத்தையும் ஆராயுங்கள். அதன் நன்மையான கருத்துக்களை புரிந்துக் கொள்ள முயலுங்கள். வெற்றி உங்களுக்கே.

Tuesday, November 11, 2008

இரத்த தான முகாம்

அல்லாஹ்வின் பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும்...
ஹஜ் பிரயாணிகளுக்கான மாபெரும் இரத்த தான முகாம்!
“இது ரியாத் மண்டலத்தின் 5 ஆவது இரத்த தான முகாம்”
இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி- ரியாத், சவுதி அரேபியா.

நாள் : 21-11-2008, வெள்ளி - மதியம் 12.30 முதல் 6.30 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)
“சென்ற இரத்த தான முகாமில் – (29.8.2008 இல்) கொடுத்தவர்களும் தற்போது கொடுக்கலாம்” தாங்கள் கொடையளிக்கும் இரத்தம், இன்ஷா அல்லாஹ், இவ்வருட ஹஜ் பயணிகளின் தேவைகளுக்கு வழங்கப்பட உள்ளது. தங்கள் பெயர்களை தவறாமல் முன்பதிவு செய்து கொள்வீர்!
தொடர்புக்கு:
நவ்லக் - 0509181890 -- பெய்ஸல் - 0507809247
நியூசெனையா ஆரிஃப் - 0564470687
TNTJ அலுவலகம் - 402 1854
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என அன்புடன் அழைக்கிறது TNTJ ரியாத்

Monday, November 10, 2008

உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும்...

இஸ்லாம் மதத்தில் ஒரு வாசகம் 'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

அரிசியில் ஒவ்வொருவருடைய பெயர் எழுதப்பட்டு இருக்கும் என்றதால், அந்த அரிசியை எடுத்து பெரிதுபடுத்தும் கண்ணாடியை எடுத்து அதில் தன்னுடைய பெயர் இருக்கின்றாதா? என்று பார்த்தா ஒவ்வொரு மனிதனும் உண்ண முடியும்? இதை இப்படியா புரிந்து கொள்வது?

இவ்வுலகத்தில் எவ்வளவு மனிதர்கள் தோன்றினாலும் அவர்களுக்காண உணவு இறைவனிடத்திலிருந்து அனைவருக்கும் உண்டு என்பதைத்தான் இலக்கிய நடையில் கூறப்பட்டதை திரித்து புராணங்களை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அதன் வழியிலேயே சிலரின் சிந்தனை செல்வதால்தான் இப்படியெல்லாம் கூற இயலுகின்றது.

ஆப்பிரிக்கா கண்டம் ஒன்றும் பாலைவனம் இல்லையே? ஏன் பலைவனத்திலேயே அனைத்து உணவு வகைகளும் கிடைக்கின்றனவே?

சரியாக பகிர்ந்து உண்ணத் தெரியாதது யாருடைய குற்றம்? அறிவைக் கொடுத்த இறைவனை குற்றம் கண்டுபிடிக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு , அதை நல்வழியில் பயன்படுத்தாதது அல்லது முயற்சிக்காதது யாருடைய குற்றம்?

அரிசி என்ற பதம் பயன்படுத்துவதைக் கண்டுமா இது இலக்கிய நடை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?

உலக்கத்தார் அனைவரின் உணவு அரிசியா?

பெரியாரின் கருத்துக்களை மட்டும் அழகாக சிந்திக்கத் தெரிந்த மனது, மற்றவர்களின் கருத்துக்கு ஏன் அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை கொடுக்க மறுக்கின்றது?

அனைத்து விசயங்களையும் அறிந்த அறிவாளியாக காட்டிக் கொள்ளும் சிலர் ஆப்பிரிக்கா மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு யார் காரணம் என்பதைக் கூடவா உங்களால் ஆராய இயலவில்லை? அல்லது மனமில்லையா?

'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

இதற்கு என்ன அர்த்தம் உலக மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வராது என்பதை இறைவனின் கூற்றை இலக்கிய வடிவில் கூறப்பட்டதே ஆகும்.

உலகத்தில் கிடைக்கக்கூடிய உணவுகள் அனைத்தும் உலக மக்களுக்கு போதுமானதாக உள்ளதா? என்று ஆராய்ந்தால் மேற்கூறிய கூற்றிற்கு விடை கிடைக்கும்.

பகிர்ந்து உண்ணும் பக்குவம் இல்லாவிட்டால், பாலைவனத்தில் கூட தரமான அரிசி நியாயமான விலையில் கிடைக்க இயலுமா? சிந்திப்பீர்?