Monday, November 10, 2008

உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும்...

இஸ்லாம் மதத்தில் ஒரு வாசகம் 'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

அரிசியில் ஒவ்வொருவருடைய பெயர் எழுதப்பட்டு இருக்கும் என்றதால், அந்த அரிசியை எடுத்து பெரிதுபடுத்தும் கண்ணாடியை எடுத்து அதில் தன்னுடைய பெயர் இருக்கின்றாதா? என்று பார்த்தா ஒவ்வொரு மனிதனும் உண்ண முடியும்? இதை இப்படியா புரிந்து கொள்வது?

இவ்வுலகத்தில் எவ்வளவு மனிதர்கள் தோன்றினாலும் அவர்களுக்காண உணவு இறைவனிடத்திலிருந்து அனைவருக்கும் உண்டு என்பதைத்தான் இலக்கிய நடையில் கூறப்பட்டதை திரித்து புராணங்களை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அதன் வழியிலேயே சிலரின் சிந்தனை செல்வதால்தான் இப்படியெல்லாம் கூற இயலுகின்றது.

ஆப்பிரிக்கா கண்டம் ஒன்றும் பாலைவனம் இல்லையே? ஏன் பலைவனத்திலேயே அனைத்து உணவு வகைகளும் கிடைக்கின்றனவே?

சரியாக பகிர்ந்து உண்ணத் தெரியாதது யாருடைய குற்றம்? அறிவைக் கொடுத்த இறைவனை குற்றம் கண்டுபிடிக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு , அதை நல்வழியில் பயன்படுத்தாதது அல்லது முயற்சிக்காதது யாருடைய குற்றம்?

அரிசி என்ற பதம் பயன்படுத்துவதைக் கண்டுமா இது இலக்கிய நடை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?

உலக்கத்தார் அனைவரின் உணவு அரிசியா?

பெரியாரின் கருத்துக்களை மட்டும் அழகாக சிந்திக்கத் தெரிந்த மனது, மற்றவர்களின் கருத்துக்கு ஏன் அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை கொடுக்க மறுக்கின்றது?

அனைத்து விசயங்களையும் அறிந்த அறிவாளியாக காட்டிக் கொள்ளும் சிலர் ஆப்பிரிக்கா மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு யார் காரணம் என்பதைக் கூடவா உங்களால் ஆராய இயலவில்லை? அல்லது மனமில்லையா?

'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

இதற்கு என்ன அர்த்தம் உலக மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வராது என்பதை இறைவனின் கூற்றை இலக்கிய வடிவில் கூறப்பட்டதே ஆகும்.

உலகத்தில் கிடைக்கக்கூடிய உணவுகள் அனைத்தும் உலக மக்களுக்கு போதுமானதாக உள்ளதா? என்று ஆராய்ந்தால் மேற்கூறிய கூற்றிற்கு விடை கிடைக்கும்.

பகிர்ந்து உண்ணும் பக்குவம் இல்லாவிட்டால், பாலைவனத்தில் கூட தரமான அரிசி நியாயமான விலையில் கிடைக்க இயலுமா? சிந்திப்பீர்?

6 comments:

')) said...

நீங்கள் எழுதிய பதிவு அருமை . தக்க நபெர்களுக்கு பதிலடி தரும்பொருட்டு எழுதி உள்ளிர்கள்.

')) said...

'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

இதற்கு என்ன அர்த்தம் உலக மக்களுக்கு உணவு தட்டுப்பாடு வராது என்பதை இறைவனின் கூற்றை இலக்கிய வடிவில் கூறப்பட்டதே ஆகும்.
//

குர் ஆனில் உள்ளதா..???

இல்லை நீங்களே அடிச்சி விடுரீங்களா..:)

வசன எண் குறிப்பிட முடியுமா..?

')) said...

சகோ. அப்துல் குத்தூஸ்
'dதானே dதானே pபே லிக்கா ஹை கானா வாலா கா நாம்' என்பது ஒரு உருது வாசகம். 'ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது' என்பது அதன் பொருள்.

அரிசி என்று இல்லை.

குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லை என்றாலும் இது இஸ்லாமியக் கருத்தோடு ஒத்துப் போகும் வாசகம்தான்.

')) said...

StarJan அவர்களே! உங்களின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

')) said...

// மின்னுது மின்னல் said...

குர் ஆனில் உள்ளதா..???

இல்லை நீங்களே அடிச்சி விடுரீங்களா..:)

வசன எண் குறிப்பிட முடியுமா..? //


மின்னுது மின்னல் அவர்களே! உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்'

மேற்கூறிய வடிவில் திருமறைக்குர்ஆனில் இல்லையென்றாலும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களுக்கு கவித்துவமாக கூறப்பட்டதே மேற்கூறிய கருத்தாகும்.

17:70 நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.

30:40 அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்.


34:24'வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?' என்று (நபியே!) நீர் கேளும், 'அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்' என்றும் கூறும்.

51:58 நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்,பலம் மிக்கவன்,உறுதியானவன்.

')) said...

// சுல்தான் said...
சகோ. அப்துல் குத்தூஸ்
'dதானே dதானே pபே லிக்கா ஹை கானா வாலா கா நாம்' என்பது ஒரு உருது வாசகம். 'ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது' என்பது அதன் பொருள்.

அரிசி என்று இல்லை.

குர்ஆனிலோ ஹதீஸிலோ இல்லை என்றாலும் இது இஸ்லாமியக் கருத்தோடு ஒத்துப் போகும் வாசகம்தான். //

சகோதரர் சுல்தான் அவர்களே,

உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

உருது மொழி வழக்கில் தானியம் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், நமதூர் வழக்கப்படி அரிசி அல்லது ஒவ்வொரு சோறு பருக்கை என்று விழித்தேக் கூறுவர்.

இங்கு ஒரு சிலர் இஸ்லாத்தை குறை கூறுவதே தனது கொள்கையாகக் கொண்டு, ஒரு சமுதாயத்திடம் உள்ள குறைகளையோ அல்லது செயல்களையோ இஸ்லாத்துடன் முடித்து போட்டு இஸ்லாத்தை மற்ற மதங்களுக்கு எவ்விதத்திலும் வித்தியாசமானது இல்லை என்பதை நிறுவ முயல்கின்றனர்.

அது அப்படி இல்லை என்பதைக் காட்டவே நான் என்னுடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்தேன்.