Saturday, August 09, 2008

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3

இங்கு பாகம் 1 மற்றும் பாகம் 2

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3
உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி!!


பாகம் 3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள்போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.

எனவே மிஹ்ராஜ் பற்றி விளக்குவதற்கு முன்னால் பகுத்தறிவின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களின் மடமைகளையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தி வருகிறோம்.

நாம் எழுப்பும் கேள்விகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என்று வீரமணி வகையறாக்களைக் கேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.


பெரியாருக்குச் சிலை

ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டார் என்பது வரலாற்று உண்மை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அறைகூவல் விட்டால் அதை நிரூபிக்க முடியும்.

ஆனால் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்கள் பெரியாருக்கு நாடெங்கும் சிலைகளை நிறுவியுள்ளனர். இரும்பு, செம்பு, பாறை போன்றவற்றை பெரியாரைப்போல் செதுக்கி வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் பீடத்தில் பெரியார் என்று எழுதியும் வைத்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிவரும் பகுத்தறிவு கொழுந்துகளிடம் இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்குமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

பெரியாரின் வெண்கலச் சிலையையும், பெரியார் எதிர்த்த இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலையையும் உலகில் உள்ள எந்தச் சோதனைக் கூடத்திலாவது சோதித்துப் பார்த்து இது பெரியார் வெண்கலம், இது சாமி சிலையின் வெண்கலம் என்று வீரமணி வகையறாக்கள் நிரூபித்துக் காட்டுவார்களா?

பெரியாரின் கற்சிலையையும், அதே கல்லால் ஆன அம்மிக் குழவியையும் அறிவியல்பூர்வமாக சோதித்தால் இரண்டும் ஒன்று என்ற முடிவுதான் கிடைக்கும்.

இது பெரியார் எனக் கூறுவதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை என்று தெரிந்து கொண்டே பெரியார் சிலை நிறுவு வது எந்த வகையான பகுத்தறிவு?

பொது இடங்களில் இத்தகைய சிலைகளை நிறுவுவதால் மக்களுக்கு இடையூறு தவிர எந்தப் பயனும் இல்லை என் பதையும், பொருள் விரயம் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி தம்மை பகுத்தறிவுவாதிகள் எனக் கூறிக்கொள்கிறார்கள்?


சிலைக்கு மாலை அணிவித்தல்


சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற - அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

இதில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் என்ன இதில் உள்ள பகுத்தறிவு என்ன என்பதை பகிரங்க மேடையில் பட்டியல் போட்டு எமது கேள்விகளை எதிர் கொள்ள போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?

இதுபோன்ற சிலைகளை வடித்துக் கொண்டு, இந்து மத பக்தர்கள் பூவையும், தேங்காயையும், சூடத்தையும் காட்டுவது மட்டும் மூடநம்பிக்கை என்றால் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது மட்டும் பகுத்தறிவா?

குறிப்பிட்ட சிலைக்குள் அவர்கள் ஒரு வரைப் பார்ப்பதற்கும் அதுபோன்ற சிலை யில் பெரியாரைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

தெய்வங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களே தவிர நம்பிக்கை ஒரே மாதிரியானதுதானே!

அவர்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு! நீங்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு என்ற வித்தியாசத்தைத் தவிர இரண்டு நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

கடவுள் சிலையைக் கடத்திச் சென்றால் அதிலிருந்து அந்தக் கடவுள் தன்னைத் தானே காத்துக் கொள்வாரா, பக்தர்கள் தானே காக்க வேண்டும், கடவுள் சிலை காணாமல் போய் விட்டால் அதைப் போலீஸ்தானே மீட்டுத் தரவேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு வாதம் பேசினீர்களே! இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் அதற்கு அறிவியல்பூர்வமாக உங்களால் மறுமொழி கூற முடியுமா?

பெரியார் சிலையை யாரேனும் கடத்திச் சென்றாலும் அவரது பக்தர்கள்தானே அதைத் தடுக்க வேண்டும். பெரியாரின் சிலையே தன்னைத்தானே காத்துக் கொள்ளுமா? பெரியார் சிலை காணாமல் போனால் போலீஸ்தானே அதை மீட்க வேண்டும்?

காக்கைகள் எச்சம் போடுவதைக்கூட அந்தச் சிலையால் தடுக்க முடியாது எனும்போது அதை பெரியார் என்று உரு வகப்படுத்துவது எந்த வகையில் பகுத்தறிவு என்பதை வீரமணி வகையறாக்கள் விளக்க வேண்டும்.

இந்தக் கேள்வியை திராவிடக் கொழுந்து ஒருவரிடம் நாம் நேரில் கேட்டபோது, அவர் அளித்த பதிலைத்தான் இவர்களும் தர முடியும்.

கல்லைக் கடவுள் என்று எண்ணுவோர் அந்தக் கல்லிடம் வேண்டுதல் செய்கிறார்கள். பெரியாரின் சிலையிடம் நாங்கள் வேண்டுதல் எதுவும் செய்வதில்லையே என்பதுதான் அந்த திராவிடக் கொழுந்து அளித்த பதில். இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?

யானைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் யானையைக் காண்பார்கள்.
பூனைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் பூனையைக் காண்பார்கள்.
மனிதனின் சிலை வடிப்பவர்கள் அதில் மனிதனைக் காண்பார்கள்.
கடவுளின் சிலை வடிப்பவர்கள் அதில் கடவுளைக் காண்பார்கள்.

எல்லாமே இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதன் வெளிப்பாடுதான். இந்த அடிப்படையை விளங்காமல் நாங்கள் பெரியாரிடம் வேண்டுதல் செய்தோமா என்று கேட்பது என்னே மதியீனம்!

யானை சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்க மாட்டான். ஆனால் பெரியார் சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்கிறான். இதனால் பெரியார் சிலை வடிப்பவர் களைவிட யானை சிலை வடிப்பவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் வாதம் செய்தால் அதை வீரமணி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்களா?


நினைவிடமும் அஞ்சலியும் !


பெரியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் எழுப்புவதும், அதில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதும் போலி பகுத்தறிவு வாதிகளின் வணக்க வழிபாடாக அமைந்துள்ளது.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அவரது நினைவிடம் என்று முடிவு செய்வதில் உள்ள பகுத்தறிவு என்ன? எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த இடத்தில் நடந்த ஏராளமான காரியங்களில் இந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டதும் ஒன்று.

அத்தனையையும் அலட்சியம் செய்துவிட்டு இன்னாரின் நினைவிடம் என்று அந்த இடத்தை முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?

அந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டால் அவர் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் இருப்பார்.

காலாகாலத்துக்கும் அதை அவரது நினைவிடம் என்று கருதிக் கொண்டாடுவதற்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்மந்தம்? அதையாவது மன்னித்து விடலாம். அந்த இடத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அழகு படுத்துவதுதான் பகுத்தறிவா?

இதையும்கூட மன்னித்து விடலாம். அந்த இடத்தில் மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிறீர்களே! நீங்கள் மலர் வளையம் வைப்பதை பெரியார் அறிவாரா? உணர்வாரா? உணர மாட்டார் என்றால் அங்கே மலர் வளையம் வைப்பதில் உள்ள அறிவியல் தத்துவம் என்ன என்பதை முஸ்லிம்களை வம்புக் கிழுக்கும் வீரமணிகள் விளக்குவார்களா? இவர்களின் பகுத்தறிவும் சுயமரியாதையும் இன்னும் அம்பலமாகும்.

இன்ஷா அல்லாஹ்...

நன்றி: உண்ர்வு இதழ்

தலைவரின் கொள்கைகளை விளங்கி நடப்பதை விட்டுவிட்டு, அவருக்கு சிலை வடித்து, மாலை மரியாதை செய்பவர்களின் பகுத்தறிவு இப்படித்தான் பல் இழிக்கும்.