Saturday, May 09, 2009

மம கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவிற்கு ஆசி

சந்தனமாக்கப் போனது சாக்கடையானது!



அரசியலை சந்தனம் ஆக்கப் புறப்பட்டோர் வெகுவிரைவிலேயே சாக்கடையானதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.


மானம் காக்க புறப்பட்ட மம கட்சி மானம் இழந்து நிற்கும் காட்சி






தினமணி (9-5-2009) பத்திரிக்கையில் வெளியான செய்தி


ஏகத்துவம் வேடம் போடும் இவரை இனி ஏகத்துவ வாதிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவார்கள்

நன்றி: www.tntj.net

Tuesday, May 05, 2009

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக


நாடு சுதந்திரம் அடைந்தது முதல் புறக்கணிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமுதாயம் ஒரளவாவது தலைநிமிர்ந்து நிற்கும் வகையிலும் பல்லாயிரம் மக்கள் உயர்கல்வியும், வேலை வாய்ப்பும் பெறும் வகையிலும் திமுக ஆட்சி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும்.

இப்படிப்பட்ட ஒரு நற்செயலை ஆளும் திமுக கட்சி செய்திருப்பதிற்கு பெறும் காரணமாக அமைந்தது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அயராத போராட்டமே ஆகும். உண்மை இப்படி இருக்க, இல்லை இல்லை நாங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு பெற்று தந்தோம் என மார்தட்டிக் கொள்ளும் தமுமுக என்கின்ற மம கட்சி, அது சொல்வது உண்மையென்றால் தனக்கு ஒரு சீட்டுக் கூட கிடைக்கவில்லை என்பதற்காக நன்றி மறந்து, திமுக விற்கு எதிராக களம் இறங்குகிறது என்றால் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

மம கட்சி என்கின்ற தமுமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் அங்குள்ள இரண்டு பேர்களின் நலனுக்காக இயங்கும் கட்சியே அன்றி, முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சி அல்ல. இதை முஸ்லிம் சமுதாயம் தெளிவாக விளங்கி, இந்த மம கட்சி என்கின்ற தமுமுகவை முற்றிலும் ஒதுக்கி வேண்டும்.

இவர்கள் முஸ்லிம் சமுதாயத்திடம் கீழ்கண்டவாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, எம்.பி பதவிக்கு யாரு வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகின்றார்கள், அதனால், யாரோ ஒருவர் வருவதற்கு பதில் நம்மவர் வந்தால் என்ன? என்று வெட்கம் கெட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

முஸ்லிம் சமுதாய மக்களே இதற்கு நீங்கள் விலைபோகி விடாதீர்கள்! ஏனென்றால், இவர்கள் நன்றி கெட்டவர்கள் மற்றும் பதவிக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்கள். மற்றைய சமுதாய மக்கள் பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்ய மாட்டார்கள் ஆனால், இந்த மம கட்சிகாரர்கள் பதவிக்கு வந்தால்? முஸ்லிம் மக்களிடம் மட்டுமே கொள்ளை அடிக்கக் கூடியவர்கள். அதனால் உசாராக இருக்கவும்.

முஸ்லிம் சமுதாய உறவுகளே, நாம் நன்றி கெட்டவர்களா? அப்படி இல்லை என்பதைக் காட்டுவதற்கு இந்த தேர்தலில் திமுக கட்சிக்கு மட்டும் உங்களது வாக்குகளை அளியுங்கள். இந்த நேரத்தில் திமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் நமக்கு துரோகம் இழைத்தவர்களே.

நாம் நன்றியுடையோராக இருப்போம் திமுகவிற்கு ஓட்டுப் போடுவோம்.

Saturday, March 14, 2009

திருமறைக் குர்ஆன் கண்காட்சி

நாள்: 14 மார்ச் 2009.
சென்னை புரசைவாக்கம் சில்வர் ஸ்டார்ஸ் ஓட்டலில் இன்றும், நாளையும் திருக்குர்ஆன் கண்காட்சி நடக்கின்றது.


கண்காட்சியை பார்வையிடும் பெண்கள்


நன்றி: தமிழ் முரசு

Tuesday, March 10, 2009

சவுதி அரேபியாவின் தலைநகரம் ரியாத்தில் மண் புயல்

சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் 10 மார்ச் 2009 அன்று மதியம் சுமார் 12 மணியளவில் மண் புயல் தோன்றியது. இதனால் ரியாத் மாநகரம் முழுவதும் ஆரஞ்ச் நிறமாக காட்சியளித்தது. இந்த புயலின் காரணமாக 70 இடங்களில் வாகனங்கள் மோதிக் கொண்டன. மதிய உணவிற்காக செல்ல வேண்டியவர்கள் ஏதும் செய்ய இயலாமல் தங்களது அலுவலகங்களிலேயே முடங்கினார்கள்.
விமானப் போக்குவரத்துக்கள் காலை 11 மணி முதல் மதியம் 2:30 வரை நிறுத்தப்பட்டது. அந்த நேரத்திற்கு வர வேண்டிய விமானங்களை தமாமிற்கு மாற்றிவிடப்பட்டது. அன்றைய பொழுது முழுவதும் ரியாத் நகரம் புழுதியில் மூழ்கியது.
உங்களின் பார்வைக்காக மண் புயல்.

















Tuesday, December 02, 2008

இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் சீரா

இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் சீரா


சீரா என்பவர் “என் எண்ணம்” என்ற வளைப்பக்கத்தில் எழுதக்கூடிய அனைத்தையும் பார்க்கும் பொழுது அது ஒரு குப்பை என்பதாகவே அறிய முடிகின்றது. தன்னை இஸ்லாமியராக காட்டிக்கொள்ளும் அவர் நிச்சயமாக அவர் இஸ்லாமியர் இல்லை என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வளைத்தளம் தான் இந்த சீராவின் என் எண்ணம்.

இஸ்லாத்தை இழிவு படுத்தும் நோக்கமாக இஸ்லாத்தில் கூறியவற்றை தவறாக உதாரணப்படுத்தி மக்களிடம் இஸ்லாத்தைப்பற்றி தவறாக அர்த்தப்படுத்த முயற்சிக்கின்றார். இவரைப் போன்றோர் பலர் இந்த வலைத்தளத்தில் இயங்கியதை நாமெல்லாம் பார்த்தோம். அத்தகையோர் தன்னுடைய தில்லு முல்லுகள் மக்களிடம் எடுபடாமல் போனதால் தலைதெரிக்க ஓடியவர்கள் இன்று புதிய அவதாரம் எடுத்து வந்துள்ளனர். மக்களே இந்த சீராவிடம் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்.

பல்வேறு அவதாரம் எடுத்து தோழ்வியை கண்டவர்கள், இப்பொழுது அவர்களின் அவதாரங்களில் ஒன்றான தான் ஒரு இஸ்லாமியன் என்பதோடு குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை சார்ந்தவன் என்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களுக்குள்ளே இயக்கம் சார்ந்த வேற்றுமையை ஏற்படுத்தி அவர்களுக்குள் பிணக்கு ஏற்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்(கள்).

அன்புடைய இஸ்லாமியச் சகோதரர்களே சீரா என்பவருடைய அனைத்து ஆக்கங்களையும் படித்து அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்தால் அவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும். அதற்காண உங்களின் ஆதரவை நாடுகின்றேன். அவரின் பொய் முகத்தை கிழித்தெரிய உங்களின் பங்களிப்பைத் தாருங்கள்.

நன்றி.

Wednesday, November 12, 2008

மனித அறிவியல் நிலையற்றது


மனித அறிவியல் நிலையற்றது. தான் கொண்ட கொள்கையில் நிலையில்லாமல் மாறிக் கொண்டே இருப்பதுதான் இந்த மனித அறிவியல். இதன் வளர்ச்சி உயர்ந்து கொண்டிருப்பது உண்மையென்றாலும், அது மனித வர்க்கம் அழியும் வரை அதன் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டே இருக்கும்.

ஆனால், இவ் அண்டத்தின் அறிவியல் வளர்ச்சியடைகிறது என்பது உண்மையென்றால் அதுதான் இல்லை. இவ் அண்டத்தின் அறிவியல் என்றென்றும் நிலையானது. அதன் வளர்ச்சி முழுமையடைந்த ஒன்றாகும். இதை மனிதன் தன்னுடைய அறிவிற்கு ஏற்ப சிருக சிருக முயன்று அறிவியலின் ஒவ்வொரு கட்டத்தை தாண்டி மேல் நோக்கி முன்னேறி வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றான்.

ஒவ்வொரு மனித அறிவியல் கண்டுபிடிப்புகளும், அதற்கு முன் உள்ளவைகளைக் காட்டிலும் உயர்தரத்திலும், இலகுவாக பயன்படுத்தும் விதத்திலுமே அமையப்பட்டிருக்கும். ஆனால், அவன் கண்டுபிடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்தும் இவ் அண்டத்தில் என்றென்றும் உள்ளவைகளைக் கொண்டே கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

இதைப்போன்றே இறைவன் என்பவன் நிலையானவன். அவன் எந்த ஒரு மாற்றத்திற்கும் உட்பட்டவனல்ல. ஆனால், மனிதர்கள் அந்த இறைவனை அறிவதற்காண அறிவு வளர்ச்சி முழுமைப் பெற்றவர்களாக இல்லை. இதை மக்கள்தான் சரியாக உணர்ந்து புரிந்துக் கொள்ளவேண்டும்.

உதாரணமாக மனிதன் வாழக்கூடிய உலகத்தைப்பற்றி இஸ்லாமிய மார்க்கம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.


2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான், (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

பூமி விரிப்பாக என்பதை அக்கால மக்கள் தங்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப விரிப்பு என்பதன் விளக்கமாக ஒரு விரிப்பு எப்படி தட்டையாக உள்ளதோ அதைப்போன்றுதான் இந்த உலகமும் தட்டையாக உள்ளது என்று புரிந்துக் கொண்டனர்.

ஆனால், கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் அறிவுத்திறன் வளர்ச்சியின் விளைவாக உலகம் தட்டையாக இல்லாமல் உருண்டையாக இருப்பதைக் கண்டறிந்தவுடன், விரிப்பு என்பதற்கான அர்த்தத்தை ஆராய்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர்களின் அறிவிற்கு புலப்பட்டது என்னவென்றால் வாழ்விடம் என்ற பொருளை கண்டறிந்தனர்.

இந்த அர்த்தத்தைக் கொண்டு மற்றைய கோள்களை ஆராயும் பொழுது அது மக்கள் வாழ்வதற்கு உகந்ததாக இல்லை. இந்த பூமி மட்டுமே மக்கள் வாழ்வதற்கு தகுந்ததாக உள்ளது. எனவே இறைவனின் கூற்றுப்படி விரிப்பு என்பதன் பொருள் வாழ்விடம் என்பதாகும் என ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

எப்படி முழுமையடைந்த அறிவியலை மனித அறிவியல் கண்டறிந்துக் கொண்டு உள்ளதோ, அதைப்போலவே முழுமையடைந்த மதம் அல்லது மார்க்கத்தை மக்கள் தங்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப தெளிவாக விளங்கியபடி உள்ளனர்.

அதனால் சகோதரர்களே... அறிவியல் எப்படி ஆராய்ச்சிக்கு உட்பட்டதோ, அதேப்போன்றுதான் மார்க்கமும் (மதம்) ஆராய்ச்சிற்கு உட்பட்டது. மார்க்கத்தையும் ஆராயுங்கள். அதன் நன்மையான கருத்துக்களை புரிந்துக் கொள்ள முயலுங்கள். வெற்றி உங்களுக்கே.

Tuesday, November 11, 2008

இரத்த தான முகாம்

அல்லாஹ்வின் பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும்...
ஹஜ் பிரயாணிகளுக்கான மாபெரும் இரத்த தான முகாம்!
“இது ரியாத் மண்டலத்தின் 5 ஆவது இரத்த தான முகாம்”
இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி- ரியாத், சவுதி அரேபியா.

நாள் : 21-11-2008, வெள்ளி - மதியம் 12.30 முதல் 6.30 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)
“சென்ற இரத்த தான முகாமில் – (29.8.2008 இல்) கொடுத்தவர்களும் தற்போது கொடுக்கலாம்” தாங்கள் கொடையளிக்கும் இரத்தம், இன்ஷா அல்லாஹ், இவ்வருட ஹஜ் பயணிகளின் தேவைகளுக்கு வழங்கப்பட உள்ளது. தங்கள் பெயர்களை தவறாமல் முன்பதிவு செய்து கொள்வீர்!
தொடர்புக்கு:
நவ்லக் - 0509181890 -- பெய்ஸல் - 0507809247
நியூசெனையா ஆரிஃப் - 0564470687
TNTJ அலுவலகம் - 402 1854
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என அன்புடன் அழைக்கிறது TNTJ ரியாத்