Tuesday, May 05, 2009

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக


நாடு சுதந்திரம் அடைந்தது முதல் புறக்கணிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமுதாயம் ஒரளவாவது தலைநிமிர்ந்து நிற்கும் வகையிலும் பல்லாயிரம் மக்கள் உயர்கல்வியும், வேலை வாய்ப்பும் பெறும் வகையிலும் திமுக ஆட்சி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும்.

இப்படிப்பட்ட ஒரு நற்செயலை ஆளும் திமுக கட்சி செய்திருப்பதிற்கு பெறும் காரணமாக அமைந்தது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அயராத போராட்டமே ஆகும். உண்மை இப்படி இருக்க, இல்லை இல்லை நாங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு பெற்று தந்தோம் என மார்தட்டிக் கொள்ளும் தமுமுக என்கின்ற மம கட்சி, அது சொல்வது உண்மையென்றால் தனக்கு ஒரு சீட்டுக் கூட கிடைக்கவில்லை என்பதற்காக நன்றி மறந்து, திமுக விற்கு எதிராக களம் இறங்குகிறது என்றால் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

மம கட்சி என்கின்ற தமுமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் அங்குள்ள இரண்டு பேர்களின் நலனுக்காக இயங்கும் கட்சியே அன்றி, முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சி அல்ல. இதை முஸ்லிம் சமுதாயம் தெளிவாக விளங்கி, இந்த மம கட்சி என்கின்ற தமுமுகவை முற்றிலும் ஒதுக்கி வேண்டும்.

இவர்கள் முஸ்லிம் சமுதாயத்திடம் கீழ்கண்டவாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, எம்.பி பதவிக்கு யாரு வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகின்றார்கள், அதனால், யாரோ ஒருவர் வருவதற்கு பதில் நம்மவர் வந்தால் என்ன? என்று வெட்கம் கெட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

முஸ்லிம் சமுதாய மக்களே இதற்கு நீங்கள் விலைபோகி விடாதீர்கள்! ஏனென்றால், இவர்கள் நன்றி கெட்டவர்கள் மற்றும் பதவிக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்கள். மற்றைய சமுதாய மக்கள் பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்ய மாட்டார்கள் ஆனால், இந்த மம கட்சிகாரர்கள் பதவிக்கு வந்தால்? முஸ்லிம் மக்களிடம் மட்டுமே கொள்ளை அடிக்கக் கூடியவர்கள். அதனால் உசாராக இருக்கவும்.

முஸ்லிம் சமுதாய உறவுகளே, நாம் நன்றி கெட்டவர்களா? அப்படி இல்லை என்பதைக் காட்டுவதற்கு இந்த தேர்தலில் திமுக கட்சிக்கு மட்டும் உங்களது வாக்குகளை அளியுங்கள். இந்த நேரத்தில் திமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் நமக்கு துரோகம் இழைத்தவர்களே.

நாம் நன்றியுடையோராக இருப்போம் திமுகவிற்கு ஓட்டுப் போடுவோம்.

14 comments:

')) said...

உங்களுகுள்ளயும் பிரச்சனையா?

said...

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்குப் பிறகு நம் சமுதாயம் இந்நிலைக்கு சென்றுள்ளதைக் கண்கூடாகக் கண்டபின்பும் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து நாம் வாக்களித்து வீணடைய வேண்டும்?.
மாற்றார்கள் அறிந்த அளவுக்குக்கூட சுயபலத்தை அறியாமலேயே இருக்கும் சகோதர சகோதரிகளே,

முஸ்லிம் அல்லாதவர் நம்முடைய வோட்டைப் பெற்று நம்மை ஓட்டாண்டி ஆக்கி, ஒரு சீட்டுச் சமுதாயமாக இன்னும் வைத்திருக்கும் அவலம் தீர்வது எப்போது?

நாம் பலம் பெற்று விளங்கும் தொகுதிகளில் திராவிடக் கட்சிகள் ஜெயிக்கும்போது (மத்திய சென்னை, துறைமுகம், ஆயிரம் விளக்கு இன்னும் நிறைய), நாம் ஏன் முஸ்லிம்களைத் தேர்வு செய்து நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலித்திட ஒன்றுபட்டு வாக்களிக்க முன்வரக்கூடாது? நம் பலத்தின் மீது நமக்கே ஏன் நம்பிக்கை வரவில்லை?

பணபலம், அதிகார பலத்துக்கு முன்னால் அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்து ஒன்றுபட்டு வாக்களியுங்கள்.

திராவிடக் கட்சிகளில் உள்ள சிறுபான்மை (முஸ்லிம்) பிரிவுத் தலைவர்களால் சமுதாய வோட்டுகளில் பிரிந்து போவதைத் தவிர சமுதாயத்துக்கு என்ன பயன்?

சிந்திப்பீர்! இன்னும் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்! திராவிடக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர்கள் வெற்றியே பெற்றாலும் நம்முடைய குரல்களை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களால் ஒலிக்கச் செய்ய இயலுமா? அவர்களது கைகள் (வாயும் சேர்த்து தான்) கட்டபட்டுள்ளனவே! கட்சிக் கொறடவின் கட்டுபாட்டை மீறி, ஒரு MP/MLA சுயமாக எதுவும் சொல்லமுடியுமா? (மேலும் விபரம் வேண்டுவோர் ஜனாப் காதர் மொய்தீன் அவர்கள் திருவாய் மலர்ந்ததை நினைவு படுத்தி கொள்ளவும்). மொத்தத்தில் அவர்கள் தாம் முற்றிலுமாகச் சார்ந்து விட்ட கட்சியின் MP/MLA ஆகச் செயல்படுவதைத் தவிர்த்து, வேறென்ன முஸ்லிம்களுக்குச் செய்துவிட முடியும்?

இவர்களுக்கா உங்கள் வாக்கு?

கூட்டணியில் இருந்தாலும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தித்து, வேட்பாளரையே மாற்றும் மமதை பிடித்த 'சூத்திரதாரிக்கு' முகத்தினில் கரிபூசிடும் மகத்தான ஆயுதம் உங்கள் வோட்டென்பதை மறந்து விடவேண்டாம்.

அருமை முஸ்லிம் சமுதாய மக்களே! இவர்கள் நம் முதுகின் மீது மாறி மாறி சவாரி செய்து நம் சமதாயத்தைப் பிரித்து, புரட்டி, இந்நிலைக்குத் தள்ளி இருக்கிறார்கள் என்பதை என்றும் மறந்திட வேண்டாம். நாம் ஒவ்வொரு முறையும் நம் உரிமைக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலையில்தான் இக்கட்சிகள் நம்மை இன்றுவரை வைத்திருக்கின்றன. நம் வோட்டு மட்டும் அவர்களுக்கு வேண்டும்; ஆனால், நமக்கான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட நமக்குத் தர மறுப்பார்கள். நாம் ஏன் இவர்கள் பின்னால் அலையை வேண்டும்? நம்முடைய ஒற்றுமையை ஓங்கி ஒலித்தால் நமக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வந்து சேராதா? நாம் ஏன் பலவீனப்பட்டுப் போனோம்? ஒற்றுமை இல்லாததால் தானே? ஏன் இந்த இழி நிலை தொடர வேண்டும்?

நமக்குள் எத்தனை பேதங்கள் இருந்தாலும் தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியைத் தேர்வு செய்யும் விஷயத்தில் ஒன்றுபடுங்கள். நம் சமுதாய வாக்கு நம் சமுதாயத்துக்குப் பயன்பட வில்லையென்றால் நம் குரல்கள் எப்படித்தான் ஆட்சியாளர்களை சென்றடைவது?

எனவே, முஸ்லிம் சமுதாயத்தவரையே உங்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்யுங்கள்.

முஸ்லிம் லீக்ஐத் திட்டமிட்டு ஓரங்கட்டி, நிரந்தரமான 'ஒரு சீட்டுக் கட்சி'யாக்கி, ஓட்டாண்டிகளாக்கி ஒதுக்கி ஓரத்தில் வைத்து, "உங்களுக்கு இதயத்தில் இடம் அளித்து விட்டேன்" என்று மாய்மாலம் காட்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய தக்க தருணம் இது.

மனிதநேய மக்கள் கட்சி உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் வோட்டுக்களை அவர்களுக்கு இட்டு வெற்றிபெறச் செய்யுங்கள். புத்தெழுச்சி பெறுவோம். நமக்கான பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுப்போம்.

சமுதாய மக்களே ஒன்றுபட்டு வோட்டளிப்பதன் மூலம், நாம் நம் பலத்தை உணர்த்திட அருமையான சந்தர்ப்பம் இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறந்திட வேண்டாம். ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களினால் இன்ஷா அல்லாஹ், ஒரு பெரும் மற்றத்தைக் கொண்டுவர முடியும். இன்று நாம் அளிக்கும் ஒன்றுபட்ட குரல், இன்ஷா அல்லாஹ் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எள் முனை அளவும் ஐயமில்லை. பெரும்பான்மை இன்றி அடுத்த கட்சியின் ஆதரவில் ஆட்சியைத் தள்ளும் ஆட்சியாளர்களுக்கு நம் சக்தியைப் புரிய வைப்போம்.

எனதருமைச் சமுதாய மக்களே!

நீங்கள் உங்கள் வாக்குகளை 100% செலுத்துங்கள். பிற இடங்களில் 50-60% பதிவாகும் வாக்குகள், நம் சமுதாய மக்கள் வாழும் இடங்களில் 80%க்கு மேல் உயர வேண்டும். இது ஒன்றே நம் பலத்தை அவர்களுக்கு உணர்த்தும்.

சிந்திப்பீர்! குடும்பத்துடன் உங்கள் வாக்குகளைத் திராவிடக் கட்சிகள் சவாரி செய்வதற்காகத் தம் முதுகைக் கொடுக்காத, நம் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும் தாருங்கள்.

இன்ஷா அல்லாஹ், திமுக அதிமுக இன்னும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற முனையும் 'அரசியல் பூனைகளுக்கு' துணிந்து மணி கட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
அபூ நஸீஹா

said...

பரிசுதமானவனின் அடிமை என பெயர் வைத்து கொண்டு பொய் உரைக்கும் முட்டாலே ணாம் தி.மு.க வை ஆட்சியில் ஏற்றியதற்கு நன்றியாக தான் நமக்கு இடஒதுக்கீடு தந்தார்கள். உனது கட்டுரையில் இருந்தே தெரிகிறது நீ யாரை சேர்தவன் என்பது. சமுதாய நலனை நாடிதான் அவர்கள் உளைக்கிறார்கள். நிச்சயம் எல்லாம் வல்ல அல்லா அவர்களுக்கு வெற்றியை தருவான் இன்ஷ அல்லா

')) said...

அப்துல் குத்தூஸ் அய்யா,
நல்லா கேளுங்கய்யா.உரைக்கும் படி கேளுங்க.முஸ்லிம்களின் நம்பிக்கையையும்,ஓட்டுக்களையும் பெற குல்லா மாட்டிக்கொண்டு,தாடி ஒட்டிக் கொண்டு,தனது பகுத்தறிவு என்ற போர்வையையே கழட்டி எறிந்து,ரம்ஜான் கஞ்சி குடித்து தியாகம் செய்த மஞ்ச துண்டுக்கா துரோகம் செய்கிறது த மு மு க.யாரை வேண்டுமானால் அல்லா மன்னிப்பார்.ஆனால் த மு மு க கும்பலுக்கு மன்னிப்பு கிடையாது.நாம பேசாம ஒசாமா அய்யா கிட்ட சொல்லி ஷரியத் கோர்ட் மூலமா இந்த கும்பலுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பது தான் நியாயமான செயலாக இருக்க முடியும்

பாலா

said...

OUR COMMUNITY WILL NOT FOUND ANY IMPROVEMENT IN EDUCATION, POLITICS, HEALTH etc.. UNTIL THE PERSONS LIKE ABDUL KUTHOOS ARE AVAILABLE IN OUR DUNIYA!! ITS TRUE ! YES , Mr. ABDUL KUTHOOS ALSO KNOWS THAT HE IS CHEETING OUR OWN COMMUNITY FOR SOME MONEY !!!

')) said...

வாங்க சகோதரர் வால்பையன் அவர்களே!

பிரச்னை எங்கதாங்க இல்லை?

')) said...

சகோதரர் அபு நஸீஹா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்க சொல்றது எல்லாம் நல்லாத்தான் இருக்கு, அதற்கு இந்த தமுமுக காரங்க எந்தவிதத்தில் தகுதியானவங்க?

ஒற்றுமை என்று சொல்கின்றீர்கள்? இதுவரை இந்த தமுமுக எப்படிப்பட்ட ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் என்பதை விளக்க முடியுமா?

முஸ்லிம்களின் பிரதிநிதி வேண்டும் எனச் சொல்கின்றீர்கள். அதற்கு இந்த தமுமுக காரங்க எந்தவிதத்தில் தகுதியானவங்கன்னு சொல்ல முடியுமா? அவர்கள் தகுதியெல்லாம் பித்ராவில் கொள்ளை அடித்தது, சுனாமி வசூலை கொள்ளை அடித்தது, வாரியத்தை வைத்துக் கொண்டு பணத்திற்காக யார் யாருக்கோ தாரை வார்த்து கொடுத்தது எல்லாம் மறந்து விட்டீர்களா? அதனுடைய பட்டியல் உங்களுக்கு வேணுமா?

உங்கள் கருத்துப்படி பார்த்தா நாமெல்லாம் ஒற்றுமையாக வேண்டுமென்றால், அதற்கு பல ஆண்டு காலங்கள் ஆகும். அதற்கான உழைப்புகளும் அதிகம் தேவைப்படும். அதுவரை பொறுத்து இருந்து பிறகு தேர்தலில் நிற்க வேண்டியதுதானே? இப்ப இந்தத் தேர்தல் சமயத்தில் மட்டும் ஒற்றுமைக் கோசம் போடக் காரணம் என்ன? பதவி ஆசை தானே? அதுவும் திமுக விலும், அதிமுக விலும் எந்த சீட்டும் கிடைக்காமல் போனப்பிறகுதானே இவர்கள் மானம் காக்கவே புறப்பட்டு இருக்கின்றார்கள்? அதற்கு முன் மானம் எங்கு போனது?

இதெல்லாம் பதவி பித்து பிடித்ததால் பேசச்கூடிய பேச்சுக்கள். இதற்கெல்லாம் மயங்கினால், இவர்களும் நம்மை அடகு வைத்து தங்களை வளப்படுத்திக்குவாங்க.

')) said...

வாங்க சகோதரர் முஜிபு அவர்களே!

சூடா இருக்கிங்களா?

அப்ப திமுக விற்கு போட்ட ஓட்டிற்காக வாரியம் தரப்பட வில்லையா?

அல்லாஹ் மேலேயே நம்பிக்கை வைத்துவிட்டீங்களா? அப்ப கூலா இருங்க எதுக்கு சூடு?

நிச்சயம் என்பதற்கும் இன்ஷா அல்லா என்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியுங்களா?

')) said...

வாங்க சகோதரர் பாலா அவர்களே!

உங்கள் பின்னூட்டங்கள் அனைத்துமே இப்படித்தாங்களா? இன்னும் காமெடியானகவே இருக்கீங்களே ஏன்?

said...

உங்கள் கருத்தை நான் ஆதரிக்கின்றேன்.

ஆரிப்
மத்திய சென்னைவாசி

')) said...

//Anonymous said...
OUR COMMUNITY WILL NOT FOUND ANY IMPROVEMENT IN EDUCATION, POLITICS, HEALTH etc.. UNTIL THE PERSONS LIKE ABDUL KUTHOOS ARE AVAILABLE IN OUR DUNIYA!! ITS TRUE ! YES , Mr. ABDUL KUTHOOS ALSO KNOWS THAT HE IS CHEETING OUR OWN COMMUNITY FOR SOME MONEY !!!//

சகோதரரே இந்த அளவிற்கா அப்பாவியா இருப்பீங்க?

said...

மயிலாடுதுறைத் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்குத் தானாமே? உண்மையா?

')) said...

//
Anonymous said...
மயிலாடுதுறைத் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்குத் தானாமே? உண்மையா? //

அநாநிமஸ் சகோதரரே...

யாருக்குத் தெரியும்! பொறுத்திருந்து பார்ப்போம்.

said...

salaams ...

arasiyal poga maatom yendru solluhireerhal...solli kondey arasiyal seihireerhal...poona election admk intha election DMK....PMK ,MDMK thevala.....

tmmk avangalooda nilaipada thelivaa solleetanga..avanga arasiyal pannuraangaa...indruvaraiyum oru naaga reegamana arasiy pannuraanga.athupoola neengalum ungal nilaipadai theliu seiyungal...

tauheeth piracharam mattum yendral athai mattum seiyungal....illayil naangal arasiyalum seivoom yendru otru kollungal....


TMMK matrum kurikool vaithu thaakuvathu yeen....matra muslim arasiyal iyakangal ungalukku theriyatha...ilai avarhal romba nallavarhal.....

iraivanai anchikollungal...arpa immai vaalkaiyil mlhividatheerhal..allahvai maranthu pesatheerhal......
regards
kulam dubai