Wednesday, October 05, 2005

ரமளான் வினாடி வினா


ரமளான் முபாரக்


அன்பு சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் சலாத்தைக் கூறி, ரமளான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

சங்கைமிகு இந்த ரமளான் மாதத்தை முன்னிட்டு, நாம் இந்த மாதத்தின் சிறப்பை அறியும் வண்ணமும், நம்மை இம்மாதத்தில் இபாதத்திற்காக தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் இங்கு வினாடி வினா தொகுக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தை நோக்காமல் அனைவரும் பதில் கொடுக்க முயற்சிக்கவும்.

ரமளான் மாத நோன்பிற்காண கேள்விகள் :


1. நோன்பாளிக்கு இரண்டு விதமான சந்தோசங்கள் உள்ளன அவை யாவை?

2. நோன்பை விடுவதற்கு யார் யாருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது?

3. நோன்பாளிகள் சொர்க்கத்திற்கு எந்த வாயிலின் வழியாக உள் நுழைவார்கள்?

4. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?

5. எதைக் கொண்டு நோன்பு திறப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை வழங்கியுள்ளார்கள்?

6. நோன்பாளி ஒருவர் தன் மனைவியுடன் கூடி விட்டால், அதற்காண பரிகாரம் என்ன?

7. யார் ஒருவர், எந்த இரண்டு நடவடிக்கைகளை விடவில்லையோ அவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்?

8. லைலத்துல் கதிர் என்பதன் அர்த்தம் என்ன?

9. சஹர் உணவின் முக்கியத்துவம் என்ன?

10. சஹர் செய்வதற்குரிய சிறந்த நேரம் எது?

11. லைலத்துல் கதிர் இரவின் சிறப்புகள் என்ன?

12. ரமளான் மாதத்தில் நன்மைக்காண கூலி எப்படிப்பட்டதாக இருக்கும்?

13. இறுதி தீர்ப்பு நாளில் ஒரு அடியானின் எந்த இரண்டு செயல்கள் அவனுக்கு அல்லஹ்விடம் பரிந்துரைச் செய்யும்?

14. தீராத நோயின் காரணமாக நோன்பை நோற்காதோருக்காண பரிகாரம் என்ன?

15. லைலத்துல் கத்ருடைய நாள் எது?

16. நோன்பாளி வாந்தி எடுக்கலாமா?

17. அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் வாயின் வாடை எப்படிப்பட்டதாக இருக்கும்?

18. நோன்பாளி ஊசி போட்டுக் கொள்ளலாமா? விபரமாக விளக்கவும்?

19. நிய்யத் என்றால் என்ன? நோன்பு நோற்பவர் எப்படி நிய்யத் வைக்க வேண்டும்?

20. ரமளானில் விடுபட்ட நோன்புகளை என்ன செய்ய வேண்டும்?



வஸ்ஸலாம்.