Wednesday, October 05, 2005

ரமளான் வினாடி வினா


ரமளான் முபாரக்


அன்பு சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் சலாத்தைக் கூறி, ரமளான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

சங்கைமிகு இந்த ரமளான் மாதத்தை முன்னிட்டு, நாம் இந்த மாதத்தின் சிறப்பை அறியும் வண்ணமும், நம்மை இம்மாதத்தில் இபாதத்திற்காக தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலும் இங்கு வினாடி வினா தொகுக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தை நோக்காமல் அனைவரும் பதில் கொடுக்க முயற்சிக்கவும்.

ரமளான் மாத நோன்பிற்காண கேள்விகள் :


1. நோன்பாளிக்கு இரண்டு விதமான சந்தோசங்கள் உள்ளன அவை யாவை?

2. நோன்பை விடுவதற்கு யார் யாருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது?

3. நோன்பாளிகள் சொர்க்கத்திற்கு எந்த வாயிலின் வழியாக உள் நுழைவார்கள்?

4. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?

5. எதைக் கொண்டு நோன்பு திறப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை வழங்கியுள்ளார்கள்?

6. நோன்பாளி ஒருவர் தன் மனைவியுடன் கூடி விட்டால், அதற்காண பரிகாரம் என்ன?

7. யார் ஒருவர், எந்த இரண்டு நடவடிக்கைகளை விடவில்லையோ அவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்?

8. லைலத்துல் கதிர் என்பதன் அர்த்தம் என்ன?

9. சஹர் உணவின் முக்கியத்துவம் என்ன?

10. சஹர் செய்வதற்குரிய சிறந்த நேரம் எது?

11. லைலத்துல் கதிர் இரவின் சிறப்புகள் என்ன?

12. ரமளான் மாதத்தில் நன்மைக்காண கூலி எப்படிப்பட்டதாக இருக்கும்?

13. இறுதி தீர்ப்பு நாளில் ஒரு அடியானின் எந்த இரண்டு செயல்கள் அவனுக்கு அல்லஹ்விடம் பரிந்துரைச் செய்யும்?

14. தீராத நோயின் காரணமாக நோன்பை நோற்காதோருக்காண பரிகாரம் என்ன?

15. லைலத்துல் கத்ருடைய நாள் எது?

16. நோன்பாளி வாந்தி எடுக்கலாமா?

17. அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் வாயின் வாடை எப்படிப்பட்டதாக இருக்கும்?

18. நோன்பாளி ஊசி போட்டுக் கொள்ளலாமா? விபரமாக விளக்கவும்?

19. நிய்யத் என்றால் என்ன? நோன்பு நோற்பவர் எப்படி நிய்யத் வைக்க வேண்டும்?

20. ரமளானில் விடுபட்ட நோன்புகளை என்ன செய்ய வேண்டும்?



வஸ்ஸலாம்.

7 comments:

said...

1.ஆ) நோன்பு திறக்கும் நேரத்தின் சந்தோசம்.
B) மறுமையில் அல்லாகுவை நேரில் காணும் சந்தோசம்

2. பிரயாணி, பாலூட்டும் பெண், கடுமையான நோயாளி

3. ரய்யான்

4. நோற்கலாம்

5. பேரீத்தம் பழம்

6. 2 மாதம் நோன்பு நோற்க வேண்டும்

7. பொய் பேசுதல், புறம் கூறல்

8. புனிதமிக்க இரவு.

9. சுன்னத்

10. பஜ்ருக்கு முன்

11. 1000 மாததை விட சிறந்த இரவு.

12. சுன்னத்துக்கு பர்ள், 1 பர்ளுக்கு 70 பர்ள்

13. குரான், நோன்பு

14. 60 ஏழைகளுக்கு உணவு

15. ரமழானின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில்

16. வேண்டுமென்றே எடுக்கக் கூடாது.

17. கஸ்தூரி மணம்

18. அத்தியாவசிய மருந்துக்கல்லாமல் குளுக்கோஸ் போன்றவை போடக் கூடாது.

19. எண்ணம் தான் நிய்யத். ரமழான் மாதத்தினுடைய பர்ள் நோன்பு வைப்பதாக நினைத்தாலே போதுமானது.

20. அடுத்த ரமழானுக்கு முன்பு நோற்க வேண்டும்.

னன்றி அப்துல் குத்தூஸ் அவர்களே!

')) said...

இறை நேசன் அவர்களே அல்லாஹ் உங்களுக்கும், எங்களுக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியைத் தருவானாக.

என் புறத்திலிருந்து விடையை நான் இங்கு தருகின்றேன் :

1. இம்மையில் நோன்பு திறக்கும்பொழுதும், மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும்பொழுதும் நோன்பாளி சந்தோசம் அடைகின்றான்.

2. பயணிகள், நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், பாலுட்டும் பெண்கள்.

3. ரய்யான் நுழைவாயிலின் வழியாக.

4. நோற்கலாம். ஆனால், தொழுகைக்கு குளிக்க வேண்டும்.

5. பேரீத்தப்பழம் மற்றும் தண்ணீர்.

6. இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்.

7. பொய் மற்றும் தீய காரியங்களை விட்டு நீங்கி இருத்தல்.

8. சங்கைமிக்க இரவு.

9. யுதர்களை விட்டும் வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக.

10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை.

11. திருமறைக் குர்ஆன் அருளிய இரவு, 1000 மாதங்களைவிட சிறப்பிற்குரிய இரவு.

12. நன்மையான ஒவ்வொரு செயலுக்கும் 10 முதல் 700 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

13. அவனின் நோன்பும், அவன் ஓதிய திருமறைக் குர்ஆனும்.

14. ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

15. ரமளானின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில்.

16. வேண்டும் என்று எடுக்கக் கூடாது.

17. கஸ்தூரியின் மணத்தைப் போன்றிருக்கும்.

18. நோய் நிவாரணி மருந்தைத்தவிர்த்து, உடலுக்கு சத்தியை கொடுக்கும் மருந்தை ஊசி மூலம் ஏற்றக் கூடாது.

19. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலேப் போதும், இதற்காக எதையேனும் மனப்பாடம் செய்து அதை சஹரின் இருதிப்பொழுதில் கூறவேண்டியதில்லை.

20. அடுத்த ரமளானுக்கு முன் விட்ட நோன்புகளை நிறைவேற்றிவிட வேண்டும்.

வஸ்ஸலாம்.

')) said...

/10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை/

பஜருக்கு முன் என்பதே சரி என்று நினைக்கிறேன்.

நோன்பாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்.

(பரிசு அறிவித்திருந்தால் அனேகமாக நிறைய பேர் கலந்து கொண்டிருப்பார்கள். நான் உட்பட;-)

')) said...

//* நல்லடியார் said...
/10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை/

பஜருக்கு முன் என்பதே சரி என்று நினைக்கிறேன்.

நோன்பாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்.

(பரிசு அறிவித்திருந்தால் அனேகமாக நிறைய பேர் கலந்து கொண்டிருப்பார்கள். நான் உட்பட;-) *//

நல்லடியார் அவர்களே வருக.

அந்த 10 நிமிடம் என்பது: சஹருக்கும், பஜருடைய தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் 50 வசனங்கள் ஓதக்கூடிய அளவு இடைவெளி உள்ளதாக அறிவித்தார்கள். இந்த 50 சிறிய வசனத்தை ஓதுவதற்காண நேரத்தைத்தான் 10 நிமிடம் எனக் குறிப்பிட்டேன் (பஜருடைய பாங்கின் நேரத்திற்கு என்பது தவறுதான்).

பரிசா? நானா? அல்லஹ்விடம் கிடைக்கும் பரிசைக் காட்டிலுமா? இக்கேள்விக்காண பதில் அளிப்பதற்காண முயற்சியே அல்லாஹ்விடத்தில் சிறந்த பரிசு உண்டல்லவா.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த புனித மாதத்தில் அதிக நன்மைகளை அள்ளித்தருவானாக.

')) said...

Abdul Kuddus!

Insha Allah I could Know many good things from this blog. Thanks

Namakkal Shibi.

said...

well.. it's like I knew!

said...

You have hit the mark. In it something is also idea good, I support.