Saturday, July 16, 2005

ஒரு ஜப்பானிய பெண்மணி இஸ்லாத்திற்கு மாறிய கதை

நான் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்திற்கு மாறிய
கதை


(ஜப்பானியப் பெண்மணியான கவுலா அவர்கள் தன்னுடைய அனுபவத்தை
விவரிக்கின்றார்கள்)



பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே
நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம்
முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.



சார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த
சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும்
மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான். மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப்
பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய
அக்கறையாக இருந்து வந்தது. நான் என்றொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது.
கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத்
தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ,
தேர்ந்தெடுக்க விரும்பினேன்.



இஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன்.
படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும்
எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை
வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்). நான்
கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப்
பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான்
நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன்.
ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான்
உணரவில்லை.



ஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த
மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள்
அதிலும் இருந்ததைக் கண்டேன். ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ
முடியாத ஏராளமான விசயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால்
அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும். மேலும் சத்தியம் என்பது
எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன்
மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை
அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.



இறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு
தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன்.
பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை.
அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது.
ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். ஆனால் எந்தவொரு
அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத்
தூண்டியது. ஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால்
என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும்
போரடிப்பதாகவும் இருந்தது. தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு
விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச்
சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்
பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.



கிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும்
வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு
வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். முஸ்லிம் சகோதரி
ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு
வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நான் முன்னர் ஒரு போதும் அறியாத ஆத்மீக
திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது. சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு
என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸுப்ஹானல்லாஹ்..! நான் ஸஜ்தாவிலிருக்கும்
போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.



ஹிஜாப் பற்றி கவுலாவின் கருத்தும் அனுபவமும் :

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவிய போது பள்ளிக் கூடத்திற்குள்
ஹிஜாப் அணிவதைப் பற்றி மிகவும் சூடான சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மதங்களோடு
சரிசம நிலையில் இருக்க வேண்டிய பள்ளியின் கொள்கைக்கு அது எதிரானது என பெரும்பாலோர்
கருதினர். முஸ்லிம் மாணவிகள் தங்கள் தலையை ஸ்கார்ப்பினால் மறைப்பது போன்ற சிறிய
விசயத்திற்காக அவர்கள் ஏன் அவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என அப்பொழுது
முஸ்லிமாகாதிருந்த எனக்குப் புரியவில்லை. ஆனால் வேலை இல்லாத் திண்டாட்டம், பெரிய
நகரங்களில் நிலவிய பாதுகாப்பின்மை போன்ற மிகவும் மோசமான பிரச்னைகளை எதிர் கொள்ள
நேரிட்ட பிரஞ்சு மக்கள் அரபு நாடுகளிலிருந்து பணி புரிவதற்காக ஆட்கள் வருவதை எண்ணி
மிகவும் எரிச்சல்பட்டார்கள். அவர்கள் தங்களின் நகரங்களிலிருந்து பள்ளிகளிலும் ஹிஜாபை
கண்டு மிகவம் மனக் கிலேசத்திற்குள்ளானார்கள்.



மறுபுறம் அரபு நாடுகளில், மேற்கத்திய கலாச்சாரம் வேர்விட்டதால் பர்தா மறைந்து
போவதற்குப் பதிலாக, மிகப் பெரும்பான்மையான மேற்கத்தியர்களும் மற்றும் சில
அரபியர்களும் விரும்பி எதிர் பார்த்துக் கொண்டிருந்ததற்கு மாற்றமாக, ஹிஜாபிற்கு,
குறிப்பாக இளம் பெண்கள், ஏராளமாக திரும்பி வருவது காணப்பட்டுக் கொண்டிருந்தது.



தற்பொழுது ஹிஜாபின் மறுமலர்ச்சியால் பிரதிபலிக்கப்பட்ட இஸ்லாமிய எழுச்சி
காலனித்துவம் மற்றும் பொருளதாரப் பின்னடைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அரபு
முஸ்லிம்கள் தங்களுடைய கௌரவம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ள
செய்யும் முயற்சியே என்று கருதப்படுகிறது.



அரபுகள் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றி வாழ்வது தொன்று தொட்டு வரும் நடைமுறைகளைப்
பின்பற்றுவதாலோ அல்லது மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மையாலே ஏற்பட்டிருக்கலாம் என்று
ஜப்பானியர்களுக்கு தோன்றலாம். ஏனெனில் மேற்கத்தியவர்களுடன் தொடர்பு கொண்ட பிஜீ
காலத்தில் அவர்களும் இத்தகைய எதிர்ப்புணர்ச்சியை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான்
மேற்கத்திய வாழ்க்கை முறை, உடை ஆகியவற்றிற்கு எதிர்ப்பாகச் செயல்படுகின்றனர். மனிதன்
எப்போதுமே பழமைவாத உணர்வுகளைக் கொண்டவனாக இருக்கிறான். ஆகவே தான் புதிய அல்ல
தெரியாத எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நன்னமை பயக்கக் கூடியதா அல்லது தீமை
பயக்கக் கூடியதா என்று உணராமல் எதிர்க்கிறான். தங்களுடைய பரம்பரை பழக்க
வழக்கத்திற்கு அடிமையானதாலும் தங்களுடைய துயரமிக்க நிலையை சரிவர தெரிந்து
கொள்ளாததாலுமே முஸ்லிம் பெண்கள் ''நசுக்கப்பட்ட சூழ்நிலை'' யின் சின்னமாக ஹிஜாபை
அணிய வேண்டுமென வற்புறுத்துகின்றனர் என சிலர் இன்னும் நினைக்கின்றனர். பெண் விடுதலை
மற்றும் சுதந்திர இயக்கம் அவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினால் அவர்கள் ஹிஜாபை
தூர எறிந்து விடுவார்கள் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.



இஸ்லாத்தைப் பற்றி சொற்ப அறிவே உள்ள சிலர் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டத்தைக்
கொண்டுள்ளனர். உலகாதாய மற்றும் பல்வேறு மதக் கொள்கைகளைப் பின்பற்றும்
மனோப்பாங்குள்ளவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை உலகளாவியவை, எக்காலத்திற்கும் ஏற்றவை
என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எவ்வாராயினும், ஏராளமான அரபுகளல்லாத பெண்களும்
இஸ்லாத்தை சத்திய மார்க்கமென ஏற்று அதைத் தழுவி தங்களுடைய தலையை மறைத்து வருகின்றனர்.
அது போன்ற பெண்களில் நானும் ஒருத்தி.



முஸ்லிமல்லாதவர்களுக்கு ஹிஜாப் என்பது உண்மையில் வினோதமான ஒன்று தான். அவர்களைப்
பொறுத்தவரையில் ஹிஜாப் தலையை மாத்திரம் மறைக்கவில்லை. ஆனால் அவர்கள் புக முடியாத
வேறு எதையோ ஒன்றை மறைக்கிறது. அதனால் தான் அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். ஹிஜாபிற்கு
உள்புறம் என்ன இருக்கிறதென அவர்கள் நிச்சயமாக வெளியிலிரந்து பார்க்க முடியாது.
பாரிஸில் இரண்டு வருடத்திற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து நான்
ஹிஜாபை அணிந்து வருகிறேன். பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவிய உடன் உடைக்கு
மேட்சாக உள்ள ஸகார்ப்பை (ஆரம்ப காலத்தலிருந்த குறைவான மார்க்க அறிவையும் உணர்வையும்
கவுலா இங்கு விவரிக்கின்றார்கள்), ஏதோ ஒரு பேஷன் என்று மக்கள் நினைக்கு வகையில்,
தலையில் அணிந்துகொண்டேன். இப்பொழுது சவுதி அரேபியாவில் என் தலைமுதல் பாதம் வரை,
கண்கள் உள்பட, கருப்பு ஹிஜாபால் மறைத்துக் கொள்கிறேன். நான் இஸ்லாத்தைத் தழுவிய
நேரத்தில் ஐந்து நேரமும் என்னால் தொழவோ அல்லது ஹிஜாப் அணியவோ முடியுமா என்று நான்
தீவிரமாக சிந்தித்ததில்லை. ஒருவேளை எதிர்மறையான விடையை பெற்று அதனால் முஸ்லிமாக மாறி
விட வேண்டும் என்ற என்னுடைய முடிவை அது பாதித்து விடலாம் என்ற பயமாக இருக்கலாம்.
பாரிஸிலுள்ள பள்ளிவாசலுக்கு முதன் முதலாக விஜயம் செய்யும் வரை இஸ்லாத்துடன் எந்தவித
தொடர்புமில்லாத ஒரு உலகத்திலேயே நான் வாழ்ந்து வந்தேன். தொழுகையோ அல்லது ஹிஜாபோ
எனக்கு பழக்கமில்லாத ஒன்றாகயிருந்தது. நான் தொழுவதையோ அல்லது ஹிஜாப் அணிவதையோ
நினைப்பதே கடினமாயிருந்தது. ஆனால் முஸ்லிமாக வேண்டும் என்ற தீவிர ஆசை அதற்குப்
பின்னால் வருவதைப் பற்றி வருத்தப்படுவதை துச்சமாக்கியது. உண்மையில் நான் இஸ்லாத்தைத்
தழுவியது ஓர் அற்புதமே. அல்லாஹு அக்பர்.



ஹிஜாபில் என்னை நானே வித்தியாசமாக உணர்ந்தேன். நான் பரிசுத்தமாகவும் பாதுகாப்பாகவும்
இருப்பதாக உணர்ந்தேன்.. அல்லாஹ்வின் தோழமையில் இருப்பதாக உணர்ந்தேன்.
வெளிநாட்டுக்காரியான என்னை ஆண்கள் கூர்ந்து பார்ப்பதால் எனக்கு மிகவும் கஷ்டமாக
இருந்தது. ஆனால் ஹிஜாபில் என்னை யாரும் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒழுக்கமற்ற
பார்வையிலிருந்து நான் பாதுகாக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்விற்கு
அடிபணிவதற்கு அடையாளம் மாத்திரமாக இல்லாமல் என்னுடைய இறைநம்பிக்கையையும்
வெளிப்படுத்துகிற ஹிஜாபை அணிவதில் நான் பெருமையடைகின்றேன். மேலும் நாம்
ஒருவருக்கொருவர் இனம் கண்டு கொள்வதற்கும் சகோதரித்துவ உணர்வை பரிமாறுவதற்கும் ஹிஜாப்
உதவுகிறது. என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இறைவன் இருக்கிறான் என்ற ஞாபகத்தை
ஏற்படுத்தவும் நான் இறைவனுடன் இருக்கிறேன் என்ற ஞாபகத்தை ஏற்படுத்தவும் ஹிஜாப்
அணுகூலமாயிருக்கிறது. நீ ஒரு முஸ்லிமாக நடக்க வேண்டும் என்று எனக்கு அது கூறுகிறது.
ஒரு காவலர் சீருடையில் தன்னுடைய கடமையைப் பற்றி எவ்வளவு உணர்வு மிக்கவராக இருப்பாரோ
அது போலவே நான் ஹிஜாபிலிருக்கும் போது முஸ்லிம் என்ற தீவிர உணர்வு ஏற்படுகிறது.



விரைவிலேயே வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம் ஹிஜாப்
அணிந்துகொண்டு செல்லத் தொடங்கினேன். யாரும் அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாமல் நான்
விரும்பி மனப்பூர்வமாக செய்தது.



நான் முஸ்லிமாகிய இரண்டு வாரம் கழித்து என்னுடைய சகோதரியின் திருமணத்தில் கலந்து
கொள்வதற்காக ஜப்பானிற்கு திரும்பிச் சென்றேன். பிரான்ஸிற்கு திரும்பிச் செல்லக்
கூடாதென முடிவு செய்து கொண்டேன். இப்பொழுது நான் முஸ்லிமாகி விட்டேன். தேடிக்
கொண்டிருந்ததை கண்டு கொண்டேன். பிரஞ்சு மொழியைக் கற்க மேலும் எந்தவித ஆர்வமும்
இல்லாமலாகி விட்டது. ஆனால் அரபியைக் கற்றுக் கொள்தவற்கு அதிக ஆர்வமாயிருந்தது.



என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு முஸ்லிமும் இல்லாத ஜப்பானிலுள்ள சிறிய நகரத்தில்
வாழ்வது ஒரு சோதனையாகவே இருந்தது. ஆனால் அந்த நிலை நான் முஸ்லிமாயிருக்கிறேன் என்ற
உணர்வை எனக்குள் தீவிரப்படுத்தியது. பெண்கள் தங்களுடைய உடலை வெளியே காட்டக் கூடாது
எனவும், தங்களுடைய உடலின் வளைவுகளை எடுத்துக் காட்டக் கூடிய உடைகளை அணியக் கூடாது
எனவும் இஸ்லாம் தடை விதித்திருப்பதால் மினி ஸ்கர்ட், அரைக் கைச் சட்டை போன்ற
என்னுடைய உடைகளை நான் துறக்க வேண்டியதாயிருந்தது. மேலும் மேற்கத்திய நாகரீக உடைகள்
ஹிஜாபிற்கு பொருந்துவதுமில்லை. ஆகவே எனக்குரிய உடையை நானே தயாரித்துக் கொள்ள முடிவு
செய்தேன். உடை தயாரிக்கும் என்னுடைய தோழி ஒருத்தியின் உதவியுடன் இரு வாரத்திற்குள்
பாகிஸ்தானி மாடலை ஒட்டிய பந்தலூன் ஒன்று தயாரித்தேன். என்னுடைய விநோதமான உடையை
அதிசயமாக மக்கள் பார்ப்பதை நான் பொருட்படுத்தவில்லை.



ஜப்பானிற்கு வந்து ஆறு மாதத்தில் அரபி மொழியையும் இஸ்லாத்தையும் கற்றே ஆக
வேண்டுமென்ற என்னுடைய ஆசை அதை நிறைவேற்றுவதற்காக ஏதாவதொரு முஸ்லிம் நாட்டிற்கு
சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்யுமளவிற்கு மிக அதிக அளவிற்கு வளர்ந்திருந்தது.
நான் கெய்ரோ சென்றேன். அங்கு எனக்குத் தெரிந்த தோழி ஒரே ஒருத்தி தான் இருந்தாள்.
நான் விருந்தாளியாகப் போயிருந்த வீட்டிலுள்ள யாருக்கும் ஆங்கிலம் தெரியாதது எனக்கு
மிகவும் வருத்தமாயிருந்தது. என்னை வீட்டினுள் அழைத்துச் சென்ற பெண்மணி உச்சி முதல்
உள்ளங்கால் வரை கருப்புத் துணியால் மறைத்திருந்தது எனக்கு மிகவும் வியப்பாயிருந்தது.
அத்தகைய 'பேஷன்' இப்போது எனக்கு மிகவும் பழக்கப்பட்டது. நான் இப்பொழுது வாழும் சவுதி
அரேபியாவில் உள்ள ரியாத் மாநகரில் அப்படியே அணிகிறேன். ஆனால் இந்த நேரத்தில் அது
எனக்கு மிகவும் வியப்பிற்குரியதாயிருந்தது. பிரான்ஸில் நடந்த முஸ்லிம்களுடைய மிகப்
பெரும் மாநாட்டில் ஒருமுறை நான் கலந்து கொண்ட போது முதன் முதலாக கருப்பு உடையணிந்த
முகத்தையும் மறைத்திருந்த பெண்ணைக் கண்டேன். பலவித நிறங்களில் உடையணிந்து தலையில்
ஸ்கார்ப்பையும் கட்டியிருந்த பெண்களின் மத்தியில் அவள் ஒரு விநோதமாகவே தோன்றினாள்.
இஸ்லாத்தின் உண்மையான போதனைகளைத் தெரியாமல் அரேபிய கலாச்சாரத்திற் அடிமைப்பட்ட ஒரு
பெண் என அவளை நான் எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் இஸ்லாத்தைப் பற்றி மிகவும்
குறைவாகவே அறிந்திருந்ததாலும் முகத்தை மறைப்பது என்பது இனப் பழக்கமே அல்லாது
இஸ்லாத்தால் ஏற்பட்டதல்ல என்று நான் நினைத்ததாலும் அவ்வாறு எண்ணினேன்.



கெய்ரோவில் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பெண்ணைக் கண்டதும் எனக்கு அதே சிந்தனை
தான் வந்தது. அவள் மிகைப்படுத்துகிறாள். இது இயற்கைக்கு எதிரானது.. ஆண்களுடனான
தொர்பை அவள் தவிர்க்க முயற்சித்ததும் வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றியது.



நான் சுயமாகத் தயாரித்த உடை வெளியே செல்லும் போது அணிவதற்கு ஏற்றதல்ல என்று கருப்பு
உடை அணிந்த சகோதரி சொன்னாள். ஒரு முஸ்லிம் பெண்ணின் உடை எவ்வாறிருக்க வேண்டுமோ
அவ்வாறு என் உடை இருப்பதாக நான் எண்ணியதால் அவளுடன் நான் திருப்திபடவில்லை. நான் ஒரு
நீண்ட கருப்புத் துணியை வாங்கி அதனைக் கொண்டு நீண்ட உடை ஒன்றும் கிமார் எனப்படும்
திரை ஒன்றும் உருவாக்கிக் கொண்டேன். அது உடல் முழுவதையும் கைகளையும் மறைக்கிறது.
முகத்தைக் கூட மறைப்பதற்கு நான் ஆயத்தமாயிருந்தேன். ஏனென்றால் அதனால் தூசியை
தவிர்ப்பதற்காக. ஆனால் அது அவசியமில்லை என சகோதரி கூறி விட்டாள். இந்த சகோதரிகள்
முகத்தை மறைப்பதை மார்க்க கடமையாக நம்பி செய்து கொண்டிருக்கும் போது நான் அது போன்ற
காரணங்களுக்காக அதை செய்யக் கூடாது. நான் சந்தித்த பெரும்பாலான சகோதரிகள் முகத்தை
மூடியவர்களாகவே இருந்த போதிலும் கெய்ரோ நகரத்தைக் கணக்கிட்டால், அவர்கள் மிகவும்
சிறிய மைனாரிட்டியே. சிலர் கருப்பு கிமாரைக் காணும் போது வெளிப்படையாக
அதிர்ச்சியுறுகின்றனர். சாதாரண அல்லது ஏறக்குறைய மேற்கத்திய கலாச்சாரத்திற்குட்பட்ட
எகிப்திய பெண்கள் கிமார் அணிந்த அவர்களிடமிரந்து சற்று விலகியே இருக்க
விரும்புகின்றனர். அவர்களை 'சகோதரிகள்' என்றழைக்கின்றனர். ஆண்களும் தெருக்களிலோ
அல்லது பேருந்துகளிலோ அவர்களை மரியாதையுடனும் அடக்கத்துடனுமே நடத்துகின்றனர். அப்
பெண்கள் அனைவரும் சகோதரித்துவத்தை தங்களிடையே பரிமாறிக் கொண்டு ஒருவரையொருவர் அறியா
விட்டாலும் தெருக்களில் சந்திக்கும் போது கூட ஸலாம் கூறிக் கொள்கின்றனர்.



நான் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்னால் பெண்களில் பாவாடைக்குப் பதிலாக பேண்டையே
விரும்பினேன். ஆனால் கெய்ரோவில் நான் அணியத் தொடங்கிய நீள உடை என்னை விரைவிலேயே
மகிழ்விக்கத் தொடங்கியது. நான் ஒரு இளவரசியைப் போல் அழகாக ஆகி விட்டதைப் போன்ற
உணர்வை எனக்கு அது அளிக்கிறது. பன்தலூனை விட நீள உடையில் நான் மிகவும் அமைதியை
உணர்கிறேன்.



கிமாரில் என் சகோதரிகள் உண்மையிலேயே அழகும் பிரகாசமும் மிக்கவர்களாயிருந்தனர்.
ஒருவகையான புனிதத்துவம் அவர்களின் முகத்தில் தோன்றியது. ஒவ்வொரு முஸ்லிமும்
தன்னுடைய வாழ்க்கையை இறைவனுக்காகவே அற்பணிக்கிறான். ''கத்தோலிக்க சகோதரிகள்'' திரையை
விமர்ச்சிக்காத இவர்கள் முஸ்லிம் பெண்களின் கிமாரைக் கண்டு மட்டும் ஏன் ''தீவிரவாதம்'',
''அடிமைத்தனம்'' என்று விமர்சிக்கின்றார்கள் என நான் ஆச்சரிப்படுகின்றேன்.



நான் ஜப்பானிற்கு திரும்பிய பிறகும் இதே போன்று உடையணிய வேண்டும் என்று ஒரு
எகிப்திய சகோதரி கூறிய போது நான் எதிரான பதிலையே கொடுத்தேன். ஜப்பானிய நகரங்களில்
இது போன்ற நீண்ட கருத்த உடையில் மக்கள் என்னைக் கண்டால் பைத்தியம் (பல பெண்கள் இது
போன்று நினைக்கிறார்கள். முஸ்லிம் அல்லாஹ்விற்கு அடிபணிவதிலிருந்து மாறிவிட
வேண்டுமென்ற ஷைத்தானின் தூண்டுதல்களே காரணமாகும்) என்றே அவர்கள் என்னை நினைப்பார்கள்.
என்னுடைய உடையைக் கண்டு அதிர்வடைந்து போனதால் நான் சொல்லும் எதையுமே அவர்கள் கேட்க
மாட்டார்கள். என்னுடைய தோற்றத்தால் (ஏற்பட்ட வெறுப்பால்) இஸ்லாத்தைப் பற்றி அறியாமல்
(நான் தாழ்ந்தவள் என்ற நினைப்பை முஸ்லிமின் உள்ளத்தில் ஊட்ட ஷைத்தான் விரும்புகிறான்.
ஆயினும் ஒரு விசுவாசி இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பதையும் தான் யாருடன்
தொடர்ப கொள்கிறோமோ அவன் மரணித்து அலலாஹ்வின் மார்க்கத்தை நிராகரித்ததற்காக அவன்
முன்னிலையில் கணக்கு கொடுக்க வேண்டியவனே என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்களின் ஹிஜாபும் ஆண்களில் தாடியும் இவ்வாறு காணப்படுவன எல்லா ஞானமும் நிறைந்த
அல்லாஹ்வின் கட்டளையாலே என்பதை எண்ணி முதலில் முஸ்லிம்களால் மதிக்கப்படவும்
பெருமைப்படுத்தப்படவும் வேண்டும்) அதை நிராகரித்து விடுவார்கள் என்று நான் அவளிடம்
வாதாடினேன்.



எவ்வாறாயினும், ஆறு மாதத்திற்குப் பிறகு என்னுடைய நீண்ட உடை எனக்குப்
பழக்கமாயிருந்தது. ஆகவே ஜப்பானிலும் அணியலாம் என்று நினைத்தேன். ஆகவே ஜப்பானிற்கு
திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இள நிறங்களில் சில நீண்ட உடைகளையும் வெள்ளை
நிறத்தில் கிமாரையும், இவைகள் கருப்புக் கிமார் போல் மக்களை அதிகமாக
அதிர்வுக்குள்ளாக்காது என்று நினைத்துக் கொண்டு, உருவாக்கினேன்.



என்னுடைய வெள்ளை கிமாரை ஜப்பானியர்கள் நிராகரிக்கவோ அல்லது ஏளனம் செய்யவோ இல்லை.
நான் சார்ந்திருக்கும் மதம் எதுவென தெரியாவிட்டாலும் அவர்கள் ஏதோ ஒன்றை ஊகிக்க
முடிந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. எனக்குப் பின்னாலிருந்த ஒரு பெண் தன்
தோழியிடம் என்னை ஒரு 'புத்த பிட்சி' என்று குசுகுசுப்பதை நான் கேட்டேன்.



ஒரு நாள் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஒருவயதான மனிதர் நான் ஏன் அப்படி
விநோதமான 'பேஷனில்' இருக்கிறேன் என வினவினார். நான் ஒரு முஸ்லிம் என்றும் பெண்கள்
தங்கள் உடலையும் அழகையும், இது போன்ற வசீகரங்களை தாங்க முடியாத பலவீனமானவர்களை
சிரமத்திற்குள்ளாக்கக் கூடாது என்பதற்காக, வெளியே காண்பிக்கக் கூடாது என இஸ்லாம்
கட்டளையிட்டிருப்பதாக நான் விளக்கினேன். என்னுடைய விளக்கம் அவரை மிகவும் கவர்ந்தது
போல் தோன்றியது. ஏனெனில் இன்றைய பெண்களில் ஆசையைத் தூண்டும் 'பேஷனை' அவர்
ஆதரிக்கவில்லை. எனக்கு அவர் நன்றி கூறி விட்டு இஸ்லாத்தைப் பற்றி அதிக நேரம்
உங்களுடன் பேச விரும்புகிறேன் எனச் சொல்லி விட்டு இறங்கிப் போய் விட்டார்.



மிகவும் சூடான காலத்திலும் நீண்ட அங்கியும் தலை மறைவையும் அணிந்துகொண்டு செல்வதை என்
தந்தை மிக வருந்தினார். ஆனால் தலையையும் கழுத்தையும் நேரடியான சூரிய வெப்பத்திலுந்து
தவிர்ப்பதற்காக ஹிஜாப் சௌகரியமாக இருந்தது. ஆனால் குட்டைப் பேண்டு அணிந்திருந்த என்
சகோதரிகளின் வெளுத்த தொடைகளைப் பார்ப்பதற்கு எனக்கு கஷ்டமாயிருந்தது. நான்
இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்னும் கூட பெண்கள் அணியும் மெல்லிய மற்றும் இறுக்கமான
உடையால் அவர்களின் மார்பு மற்றும் இடுப்பு வெளியே தெரிவதை காண நேரிட்டால் மிகவும்
தர்ம சங்கடமாயிருக்கும். நான் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்து விட்டதாக உணர்ந்தேன்.
பெண்ணான எனக்கே அத்தகைய தோற்றம் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது எனில் ஆண்களில் மனதில்
அது எத்தகைய விளைவை தோற்றுவித்திருக்கும்?



உடலை அதன் இயற்கையான நிலையிலிருந்து ஏன் மறைக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம்?
ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நீச்சல் உடையில் நீந்துவது மிகவும் மோசமான
செயலாக ஜப்பானில் கருதப்பட்டது. ஆனால் இப்போது ஜட்டி, பாடியுடன் அவர்கள்
நீந்துகிறார்கள். ஆயினும், நீங்கள் பாடி போடாமல் நீந்தினால் உங்களை வெட்கமற்றவள் என
சிலர் கூறலாம். ஆனால் தெற்கு பிரான்சு கடற்கரைக்கு நீங்கள் போய்ப் பார்த்தால் அங்கே
இளம் பெண்களும் வயதான பெண்களும் பாடியில்லாமல் சூரியக் குளியல் செய்வதைக் காணலாம்.
அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருக்கும் சில கடற்கரைக்குச் சென்றால் நிர்வாணிகள்
பிறந்த குழந்தைகளைப் போல் முழு நிர்வாணமாக சூரியக் குளியல் செய்வதைப் பார்க்கலாம்.
ஆனால் மத்திய காலக் கட்டங்களில் ஒரு சிப்பாய் தன்னுடைய மனைவியின் ஷுவைப் பார்த்துக்
கூட நடுங்கினான். இதிலிருந்து 'மறைக்கப்பட வேண்டிய பாகங்கள்' எவையென்ற வரையறை
மாற்றப்படலாம் என்பது தெரிகிறது. உங்களுடைய இடுப்பபையும் மார்பையும், அவைகள்
உங்களுடைய கைகள் மற்றும் முகம் போன்றே இருந்தும், ஏன் மறைக்கிறீர்கள் என்று
நிர்வாணிகள் உங்களிடம் கேட்டால் நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்? அது போன்று தான்
முஸ்லிம் பெண்களின் ஹிஜாபும், முகம் மற்றும் கையைத் தவிர (முகத்தை மறைக்கவும்
இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆண்களைக் கவரக் கூடிய வசீகரம் பெண்களில் முக அழகில் உள்ளது
என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வது சிறப்பு.
கவுலா அவர்களும் முகத்தை மறைத்தே வருகிறார்கள்) உள்ள அனைத்து பாகங்களும் மறைக்கப்பட
வேண்டியவை என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில், அல்லாஹ் அவ்வாறே வரையறுத்துள்ளான்.
ஆகவே, அவைகளை நாங்கள் அன்னிய ஆண்களிடமிருந்து மறைக்கிறோம். நீங்கள் எதையாவது மறைத்து
வைத்திருந்தால் அதன் மதிப்பு உயருகிறது. பெண்களில் உடலை மறைவாக வைப்பது அதன் எழிலை
அதிகப்படுத்துகிறது. ஒரே பாலுடையவர்களுக்குக் கூட சகோதரியின் பின் கழுத்து அது
எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் வியக்கும் வகையில் அழகாகத் தோன்றுகிறது.
ஒரு மனிதன் வெட்கவுணர்வை இழந்து தெருவில் நிர்வாணமாக நடந்து மற்றவர்களின்
முன்னிலையில் 'காதல்' செய்வானேயாகில் அவளுக்கும் மிருகத்திற்கும் எந்தவி
வித்தியாசமும் இல்லை. மனிதன் வெட்க உணர்வை தெரிந்த போது தான் பண்பாடு என்பதே
தொடங்கியதாக நான் நினைக்கிறேன்.



சில ஜப்பானிய மனைவிமார்கள், அவர்கள் வீட்டிலிருக்கும் போது எவ்வாறிருந்தாலும்,
வெளியே செல்லும் போது தங்களை அலங்கரித்துக் கொண்டு செல்கின்றனர். ஆனால் இஸ்லாத்திலோ
மனைவி கணவன் முன் தான் அழகாக தோன்ற முயற்சிக்கிறாள். அது போலவே கணவனும் மனைவியை
சந்தோசப்படுத்துவதற்காக நன்றாக தோன்ற முயற்சிக்கிறான். தங்களுக்கிடையேயும்
மற்றவர்களோடும் வெட்கவுணர்வை கொண்டிருக்கின்றார்கள்.



ஆண்கள் பெண்களை எப்பொழுதும் காமப் பசியோடு தான் பார்ப்பது போலவும் அதனால் தான்
அவர்களின் ஆசையை தூண்டாமலிருப்பதற்காக கைகளையும் முகத்தையும் தவிர வேறு எததையும்
வெளிக்காட்டுவதில்லை என ஏன் ''வீணாக நினைத்துக் கொண்டு'' இருக்கிறீர்கள் என நீங்கள்
கேட்கலாம்.



ஆனால் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் ''பெண்கள் தொல்லைப்படுத்தப்படும் பிரச்னை
(ஈவ்டீசிங்) மனிதன் இத்தகைய கவர்ச்சிகளை எதிர்த்து தன்னை காத்துக் கொள்வதில் எத்தனை
சக்தியற்றவனாக இருக்கிறான் என்பதை காட்டியுள்ளது. ஆண்கள் ஒழுக்கம் பேணுபவர்களாகவும்
கட்டுப்பாடு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். வெறுமனே சொல்வதன் மூலம் பெண்கள்
இவ்வாறு பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. ஏனெனில் நீ விரும்பினால் என்னை
அனுபவித்துக் கொள்ளலாம் என்று ''மினி ஸ்கர்ட்'' ஆண்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
ஆனால் ஹிஜாபோ 'நான் உனக்கு தடுக்கப்பட்டவள்' என தெளிவாகச் சொல்கிறது.



கெய்ரோவிலிருந்து ஜப்பானிற்கு வந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் சவூதி
அரேபியாவிற்குப் புறப்பட்டேன். ஆனால் இந்த முறை என் கணவருடன் சென்றேன். என் முகத்தை
மூடிக் கொள்வதற்காக ஒரு சிறிய கருப்புத் துணியையும் தயாரித்து வைத்திருந்தேன்..



ஆனால் ரியாதிற்கு வந்து பார்த்த போது எல்லா பெண்களும் முகத்தை மறைத்திருக்கவில்லை.
முஸ்லிம்களல்லாத வெளிநாட்டினர் தலையைக் கூட மறைக்காமல் வேண்டா வெறுப்பாக கருப்பு
அங்கியை அணிந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டு முஸ்லிம்களும் கூட முகத்தை திறந்து
வைத்திருந்தனர். (எல்லோரும் அல்ல. உண்மையில் சவூதி அரேபியாவில் பல வெளிநாட்டு
முஸ்லிம் பெண்களும் தங்களுடைய முகத்தை மறைக்கின்றனர்)சவூதி பெண்களைப் பொறுத்தவரை
அவர்கள் அனைவரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மறைத்திருந்தனர்.



நான் முதன் முதலில் வெளியே நிகாப் அணிந்து சென்ற போது அது மிகவும் நன்றாக இருப்பதை
உணர்ந்தேன். ஒருமுறை அதை அணிந்து பழக்கப்பட்டு விட்டால் பின் எந்தவித அசௌகரியமும்
இல்லை. மாறாக, நான் மிகவும் கண்ணியத்திற்குரியவளாகவும் சிறப்பிற்குரியவளாகவும் ஆகி
விட்டதைப் போன்று உணர்ந்தேன். மிகப் பெரிய படைப்பை திருடி இரகசியமாக அனுபவித்துக்
கொண்டிருக்கும் அதன் உரிமையாளரைப் போன்று நான் உணர்ந்தேன். உங்களுக்குத் தெரியாத,
நீங்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படாத புதையல் என்னிடம் உள்ளது. ரியாத்தின் வீதியில்
ஒரு குண்டான கணவனுக்குப் பின்னால் கருப்பு உடையணிந்து செல்லும் ஜோடியை நசுக்கும்,
நசுக்கப்படும் அல்லது எஜமானன் அடிமை உறவின் சித்திரமாக வெளிநாட்டுக்காரர்கள்
அவர்களைப் பார்க்கலாம். ஆனால் தாங்கள் அரசிகளைப் போலவும் வேலைக்காரர்களால் அழைத்துச்
செல்லப்படுகிறோம் என்றே பெண்கள் உணர்கிறார்கள் என்பதே உண்மை.



ரியாதிற்கு வந்த முதல் சில மாதங்களில் நான் கண்ணிற்கு கீழேயுள்ள முகத்தையே மறைத்தேன்.
ஆனால் நான் குளிருடை தயாரித்த போது அதிலேயே கண்ணையும் மறைக்கும் மெல்லிய துணி ஒன்றை
இணைத்துக் கொண்டேன். என்னுடைய பாதுகாப்பு கவசம் முழுமை பெற்றது. என் சௌகரியமும் தான்.
ஆண்களின் கூட்டத்தில் கூட நான் எந்த சங்கடத்தையும் உணர்ந்ததில்லை. ஆண்களின்
கண்களுக்கு முன்னால் நான் (கண்ணியமிக்கவள் என) இனங் கண்டு கொள்ளப்பட்டு விட்டது போல்
உணர்ந்தேன். என்னுடைய கண்களை மூடாமல் திறந்து வைத்திருந்த போது தற்செயலாக ஆண்களின்
கண்களைச் சந்தித்த போது, குறிப்பாக மிகவும் கூர்மையான கண்களைப் பெற்றிருக்கும்
அரபுகளின் கண்களை, சங்கடத்தை உணர்தேன். கண்களை மூடிக் கொள்ளும் துணி வெயிலுக்கு
அணியும் கண்ணாடியைப் போன்று மற்றவர்களின் பார்வை ஊடுறுவுவதைத் தடுக்கிறது.



முஸ்லிம் பெண்கள் தன்னுடைய கண்ணியத்திற்காகவே தன்னை மறைத்துக் கொள்கிறார்கள் என
கவுலா கூறுகிறார்கள். அன்னியனின் கண்களால் அனுபவிக்கப்படுவதற்கோ அல்லது அவனுடைய
கவர்ச்சிப் பொருளாக இருப்பதற்கோ அவர்கள் மறுக்கிறார்கள். அன்னிய ஆண்களின் கண்களுக்கு
விருந்தாக தன்னைக் காட்டும் மேற்கத்திய பெண்களைக் கண்டு அவர்கள் இரக்கமே
கொள்கிறார்கள். ஒருவர் ஹிஜாபை வெளியிலிருந்து கவனித்தால் உள்ளிருப்பது என்ன என்பதை
ஒருக்காலும் கண்டு கொள்ள மாட்டார். ஹிஜாபை பேணுபவள் என்ன நன்மை என வெறுப்புடன்)
பார்ப்பதும் வித்தியாசமானதாகும். நாம் இரண்டு வித்தியாசமானவற்றைப் பார்க்கிறோம்.
இந்த வித்தியாசம் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதிலுள்ள வித்தியாசத்தை விளக்குகிறது.
வெளியிலிருந்து பார்;த்தால் இஸ்லாம் சுதந்திரமற்ற ஒரு சிறைச்சாலையைப் போல்
தோன்றுகிறது. அதற்குள்ளிலிருந்து வாழ்வதில் நாங்கள் அதற்கு முன் ஒருபோதும் கண்டிரா
அமைதியையும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் உணர்கிறோம். பெண்களை நசுக்கும் ஒரு
மார்க்கமாக இஸ்லாம் உண்மையில் இருந்தால் ஏன் இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்,
ஜப்பானிலும் தங்கள் விடுதலையையும் சுதந்திரத்தையும் துறந்து இஸ்லாத்தை ஏற்றுக்
கொள்கிறார்கள்?! மக்கள் இதைச் சிந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஒரு
தலைப்பட்ச எண்ணத்தால் குருடாகிப் போனவன் தான் அதைப் பார்க்க முடியாமல் இருக்கலாம்.
ஆனால் ஹிஜாபிலுள்ள ஒரு பெண் ஒரு பிரகாசமான அழகு மிக்க தேவதையைப் போன்றோ அல்லது
தன்னம்;பிக்கை அமைதி கண்ணியம் மிக்க ஒரு புனிதரைப் போன்றோ இருக்கிறாள்.
நசுக்கப்படுபவள் சிறிய சாயலோ அல்லது அடையாளமோ அவள் முகத்தில் காணப்படுவதில்லை.



நாம் இஸ்லாத்தை இவ்வளவு விளக்கிக் கூறிய பிறகும் அவர்கள் சரியாக அதைப் புரிந்து
கொள்ளா விட்டால், ''அவர்கள் பார்க்க முடியாத குருடர்கள்'' என தன்னுடைய
அத்தாட்சிகளைப் மறுப்பவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைக் குறிப்பிடுவதைத்
தவிர வேறு என்ன செய்ய முடியும்?

 

6 comments:

said...

It is very funny the way you try to convince people to accept Mohmedanism, which is NOT at all a religion but a fundamental anarchy set to rule the whole world with iron hand. The poor Japanese girl does NOT know the trule colour of Mohmeddanism. Or I very much doubt whether she is real or just a fictitious character created by people like you in the fond expectations of recruiting people for membership in your fundamental global gang in the garb of a religion. Have you ever heared of Kamaladas? She is a Poet from Kerala and converted into Mohmedanism in a momentary impulse because she had developed relationship with one Mohmeddan. Now she is confused and wants to come out of that so called religion, having exposed to the true colour of it. The day is NOT far when your Japanese girl would also regret for her blunder and revert back to her original faith!

')) said...

வேதத்தை உடையவர்களில் பெரும்பலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காபீர்களாக மாற வேண்டுமென விரும்பிபுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடயவனாக இருக்கிறான்.(திருக்குர்ஆன்-2:109)

மாஸா அல்லாஹ்... திருக்குர்ஆனின் வசனங்கள் எக்காலத்திற்கும் ஏற்றது என்பதற்கு அன்பர் மலர்மன்னின் கூற்றும் ஒரு ஆதாரம்.

said...

Dear Kuthus,
It is a very simple logic and there is no neccessity for a religious scripture to state this. There are many stanzas in your scriptures stating that Allah would never forgive and there are also historic facts that your Mohmed and his followers had never had the temperament to forgive others for following different faiths or reverting bsck to their original faith after finiding the true colour of Mohmeddanism. You can do well if you stop misleading people by quoting the polite portions of your scriptures, which were purely meant to the inner fold that is Arabs and those in the Mohmeddan brotherhood and try to explain the arrogant portions of your scriptures meant for non-Arabs and outside the Mohmeddan brotherhood. I hope you understand what I mean.

A fellow human being ,
Malarmannan

')) said...

அன்பர் மலர்மன்னன் அவர்களே! சகோதரத்துவம் சம்பந்தமாக நீங்கள் யாருடைய கூற்றை ஆதாரமாகக் கொண்டு கூறுகின்றீர்களோ? அவர்களின் கூற்றுக்கு தகுந்த பதில் அவர்களுக்கு கொடுத்துள்ளேன். நீங்கள் அங்கு சென்று தெரிந்துக் கொள்ளுங்கள். இஸ்லாத்தில் சகோதரத்துவத்தை இட்டுக்கட்டைக் கொண்டு திசை திருப்ப முடியாது என்பதை.

')) said...

Welcome to the thamizmanam.com blog rating service.
Please help in just one click, by indicating posts worthy of recommending to readers who may have limited time to spend . Click on + button if you recommend to others, and - if you don't. Thanks.

Sorry! This blog is not yet listed in thamizmanam.com

உங்கள் பதிவு ஏன் இன்னும் தமிழ் மணத்தில் பட்டியலிடப்படவில்லை? நான் Star ஐ கிளிக் செய்யும் போது மேற்கண்ட Message கிடைத்தது. கவனிக்கவும்.

said...

Could you please indicate some of the 'arrogant portions of the scriptures. So that you can get them clarified. You peoples atleat now try to change yourselves. No muslims like the word Mohamedanism for Islam. You poeple please come and have a meaningful, open hearted dialogue instead of the way like the proverb 'kaamaalaik kannanukku kandathellam Manjal'