Tuesday, March 10, 2009

சவுதி அரேபியாவின் தலைநகரம் ரியாத்தில் மண் புயல்

சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் 10 மார்ச் 2009 அன்று மதியம் சுமார் 12 மணியளவில் மண் புயல் தோன்றியது. இதனால் ரியாத் மாநகரம் முழுவதும் ஆரஞ்ச் நிறமாக காட்சியளித்தது. இந்த புயலின் காரணமாக 70 இடங்களில் வாகனங்கள் மோதிக் கொண்டன. மதிய உணவிற்காக செல்ல வேண்டியவர்கள் ஏதும் செய்ய இயலாமல் தங்களது அலுவலகங்களிலேயே முடங்கினார்கள்.
விமானப் போக்குவரத்துக்கள் காலை 11 மணி முதல் மதியம் 2:30 வரை நிறுத்தப்பட்டது. அந்த நேரத்திற்கு வர வேண்டிய விமானங்களை தமாமிற்கு மாற்றிவிடப்பட்டது. அன்றைய பொழுது முழுவதும் ரியாத் நகரம் புழுதியில் மூழ்கியது.
உங்களின் பார்வைக்காக மண் புயல்.

















8 comments:

')) said...

இந்த வருடம் புழுதிக் காற்று அதிகமே!

')) said...

வருகைக்க நன்றி அநானிமஸ் மற்றும் சுவனப்பிரியன் அவர்களே.

நான் பார்த்தவரை புழுதிக்காற்று பரவலாக எல்லா திசைகளிலும் ஒரே நேரத்தில் தோன்றக் கண்டிருக்கின்றேன். ஆனால், இந்தப் புழுதிக்காற்றானது வடக்கு திசையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி சென்றது. இதனால் ரியாத் முழுவதும் ஆரஞ்ச் நிற தோற்றம் தந்தது கூட வியப்பாக இருந்தது.

')) said...

சார்,
ரியாதில் எங்கே இருக்கிறீர்கள்?
- fakhrudeen.hஅட் ஜிமெய்ல்

')) said...

//சார்,
ரியாதில் எங்கே இருக்கிறீர்கள்?
- fakhrudeen.hஅட் ஜிமெய்ல்//

இப்னு ஹம்துன், உங்களின் வருகைக்கும், அன்பான விசாரிப்புக்கும் நன்றி.

ரியாதில் அரூபா சாலை, சுலைமானியா என்ற ஏரியாவில் பணி செய்கின்றேன். தங்கி இருக்கும் இடம் குபேராவில் உள்ளது.

இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும்பொழுது உங்களை மின்மடலில் தொடர்பு கொள்கின்றேன்.

')) said...

எங்கூர்ல போன மாசமே வந்திருச்சு.குப்பையெல்லாம் மறுபடியும் இந்தப் பக்கம் தள்ளி விட்டுட வேண்டாம் சொல்லிப்புட்டேன்:)

')) said...

ஃஃ ராஜ நடராஜன் said...
எங்கூர்ல போன மாசமே வந்திருச்சு.குப்பையெல்லாம் மறுபடியும் இந்தப் பக்கம் தள்ளி விட்டுட வேண்டாம் சொல்லிப்புட்டேன்:) ஃஃ

உங்க ஊரு எந்த ஊரு ராசா? எங்களுக்கு வாரா வாராம் அடிச்சுக் கொண்டேதான் இருக்கு.

நேற்று கூட மண் புழுதியுடன் சேர்ந்து மழையும் தூரியது.

')) said...

ராஜ நடராஜன் சார்,

நீங்க குவைத்திலேயே இருக்கீங்க? நல்லது. நமக்கு எது நடந்தாலும், உங்களுக்கும் அது தானே நடக்குனும். ஏன்னா... நம்ம காத்தோட்டம் அப்படித்தானே போய்கிட்டு இருக்கு.

உங்கள் புரோபைலை இப்பத்தான் பார்த்தேன், அதில்தான் தெரிந்தது உங்களின் வசிப்பிடம் குவைத் என்று. என்னா... நமக்க இடைப்பட்ட தூரம் 400 கிலோமீட்டர் தானே. சொந்தம் விட்டா போய்டும்.

நேத்து அடித்த காத்து அங்க வந்துச்சுங்களா? :)

said...

Hi there, I attract in the air your blog via Google while searching in the routine of basic aid representing a callousness combat in mel‚e and your mail looks non-standard real captivating after me