Tuesday, August 10, 2010

ரமளான் வாழ்த்துக்கள் மற்றும் அன்பளிப்பு


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
ரமளான் வாழ்த்துக்கள்.
 

 

 

 

தயவு செய்து இந்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ளவும்

(அதன் மேல் கிளிக்கவும்)

 

 

http://www.anmar4u.com/uploads/images/anmar-9e8aa147e8.gif

 

   








Tuesday, July 06, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டின் விளைவு

சந்திப்பு: பிரதமர், சோனியா காந்தி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.

பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.

இது குறித்த முழு விபரம் வருமாறு:

மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.

மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.

பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.

மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.

தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.

இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.

இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.

பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.

தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் அவர்கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.

பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.

மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.

ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.

அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.

எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.

சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.

அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.

இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.

புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்

குறிப்பு: ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.


நன்றி: http://www.tntj.net/?p=17406

Wednesday, April 21, 2010

மனிதம் களிமண்ணால் படைக்கப்பட்டதா?

மனிதம் களிமண்ணால் படைக்கப்பட்டதா?

முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, 'கரு'வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது, அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.

முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) 'இயற்கையே கடவுள்' என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

'பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது' என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.

இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் 'அமீபா' என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றி, அது குரங்கு நிலைக்கு வந்து, அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன) தத்துவத்தை(?) நம்பி வருகிறார்கள்.

இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். 'அமீபா'விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்து, மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று, மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும். மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?

படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே டார்வினின் 'இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன' என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.

மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.

மண்ணின் 'மூல'சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்

மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது, எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்: பிராணவாய்வு, கால்சியம், பொட்டாசியம், உப்பு, கார்பன், ஹைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், சோடியம், நைட்ரஜன், குளோரின், மெக்கினீசியம், இரும்பு, செம்பு போன்றவைகளாகும்.)

ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

முதல் மனிதனும், குர்ஆனும்

மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.
(அல் குர்ஆன் 6: 2 )

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
(அல் குர்ஆன் 30: 20 )

குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது 'தீன்' (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், 'துராப்' (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல. சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.

'தீன்' என்ற வார்த்தையும், 'துராப்' என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும். மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் 'தீன்' என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் 'துராப்' என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் 'மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்' என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாது, களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டு, உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லை, பாத்திரங்கள், செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும், அதனால் தான் களிமண்ணில் பாத்திரம், செங்கள் செய்பவர்கள், வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது. காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)

இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான 'மூல' த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை. மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல் குர்ஆன் 32: 7)

இந்த வசனத்தில் 'மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்' என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.

களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்து, எந்தந்த நிலையை அடைந்து, அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.

إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்: 37:11)

இது மனித படைப்பின் இரண்டாவது நிலை

பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)

وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறிய, தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். (அல் குர்ஆன்: 15: 26)

இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.

'ஹமஉ' என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். 'மஸ்னூன்' என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண், களிமண், தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறி, துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறி, துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.

خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். (அல் குர்ஆன்: 55:1 )

இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை

'ஸல்ஸால்' என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் 'ஸல், ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு 'ஸல்ஸால்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 'ஸல்ஸால்' என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.

وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். (அல் குர்ஆன்: 23:12
)

இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களி மண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.

அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. 'குன்' என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் 'ஆகுக!' எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும். (அல் குர்ஆன்: 36: 82 )

எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும், எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண், களிமண், தண்ணீர் கலவையினை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கி, அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.

நன்றி: இஸ்லாம் கல்வி.காம்.

Saturday, March 13, 2010

இஸ்லாத்தை தழுவிய பெரியார்தாசன்

Saturday, May 09, 2009

மம கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவிற்கு ஆசி

சந்தனமாக்கப் போனது சாக்கடையானது!



அரசியலை சந்தனம் ஆக்கப் புறப்பட்டோர் வெகுவிரைவிலேயே சாக்கடையானதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.


மானம் காக்க புறப்பட்ட மம கட்சி மானம் இழந்து நிற்கும் காட்சி






தினமணி (9-5-2009) பத்திரிக்கையில் வெளியான செய்தி


ஏகத்துவம் வேடம் போடும் இவரை இனி ஏகத்துவ வாதிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவார்கள்

நன்றி: www.tntj.net

Tuesday, May 05, 2009

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக


நாடு சுதந்திரம் அடைந்தது முதல் புறக்கணிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமுதாயம் ஒரளவாவது தலைநிமிர்ந்து நிற்கும் வகையிலும் பல்லாயிரம் மக்கள் உயர்கல்வியும், வேலை வாய்ப்பும் பெறும் வகையிலும் திமுக ஆட்சி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும்.

இப்படிப்பட்ட ஒரு நற்செயலை ஆளும் திமுக கட்சி செய்திருப்பதிற்கு பெறும் காரணமாக அமைந்தது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அயராத போராட்டமே ஆகும். உண்மை இப்படி இருக்க, இல்லை இல்லை நாங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு பெற்று தந்தோம் என மார்தட்டிக் கொள்ளும் தமுமுக என்கின்ற மம கட்சி, அது சொல்வது உண்மையென்றால் தனக்கு ஒரு சீட்டுக் கூட கிடைக்கவில்லை என்பதற்காக நன்றி மறந்து, திமுக விற்கு எதிராக களம் இறங்குகிறது என்றால் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

மம கட்சி என்கின்ற தமுமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் அங்குள்ள இரண்டு பேர்களின் நலனுக்காக இயங்கும் கட்சியே அன்றி, முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சி அல்ல. இதை முஸ்லிம் சமுதாயம் தெளிவாக விளங்கி, இந்த மம கட்சி என்கின்ற தமுமுகவை முற்றிலும் ஒதுக்கி வேண்டும்.

இவர்கள் முஸ்லிம் சமுதாயத்திடம் கீழ்கண்டவாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, எம்.பி பதவிக்கு யாரு வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகின்றார்கள், அதனால், யாரோ ஒருவர் வருவதற்கு பதில் நம்மவர் வந்தால் என்ன? என்று வெட்கம் கெட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

முஸ்லிம் சமுதாய மக்களே இதற்கு நீங்கள் விலைபோகி விடாதீர்கள்! ஏனென்றால், இவர்கள் நன்றி கெட்டவர்கள் மற்றும் பதவிக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்கள். மற்றைய சமுதாய மக்கள் பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்ய மாட்டார்கள் ஆனால், இந்த மம கட்சிகாரர்கள் பதவிக்கு வந்தால்? முஸ்லிம் மக்களிடம் மட்டுமே கொள்ளை அடிக்கக் கூடியவர்கள். அதனால் உசாராக இருக்கவும்.

முஸ்லிம் சமுதாய உறவுகளே, நாம் நன்றி கெட்டவர்களா? அப்படி இல்லை என்பதைக் காட்டுவதற்கு இந்த தேர்தலில் திமுக கட்சிக்கு மட்டும் உங்களது வாக்குகளை அளியுங்கள். இந்த நேரத்தில் திமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் நமக்கு துரோகம் இழைத்தவர்களே.

நாம் நன்றியுடையோராக இருப்போம் திமுகவிற்கு ஓட்டுப் போடுவோம்.

Saturday, March 14, 2009

திருமறைக் குர்ஆன் கண்காட்சி

நாள்: 14 மார்ச் 2009.
சென்னை புரசைவாக்கம் சில்வர் ஸ்டார்ஸ் ஓட்டலில் இன்றும், நாளையும் திருக்குர்ஆன் கண்காட்சி நடக்கின்றது.


கண்காட்சியை பார்வையிடும் பெண்கள்


நன்றி: தமிழ் முரசு