Saturday, March 13, 2010

இஸ்லாத்தை தழுவிய பெரியார்தாசன்

8 comments:

said...

பரிதாபம், பகுத்தறிவு பகுத்தறிவு என்று மேடை தோறும் முழங்கிய பெரியார்தாசன், இப்படி ஒரு முட்டாள்களின் மதத்தை உண்மை மதம் என்றும், முகமது என்ற மூளையற்றவனின் உளறல்களை கடவுளின் வார்த்தைகள் என்றும் தன் பங்குக்கு இவரும் உளறி கொட்டி இருப்பது பரிதாபம்தான். பாவம், கடலில் விழுந்தால் கூட நீச்சல் தெரிந்தால் தப்பித்து கொள்ளலாம். பெரியார்தாசன் என்ற பகுத்தறிவுவாதி விழுந்து இருப்பது மோசமான புதைகுழியில். மீழ வழியே இல்லை. இதில் சந்தோசமான விசயம், ஒரு பகுத்தறிவு வேடதாரியின் வெளி வேடம் கலைந்து இருக்கிறது.

M. Jaya Prakash

')) said...

M. Jaya Prakash அவர்களே உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

உங்களின் உள்மன அழுக்கு நன்றாக வெளிப்பட்டுவிட்டது. உங்களின் மனம் அமைதிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டி கொள்கின்றேன்.

அல்லாஹ் உங்களையும் இஸ்லாம் மீது பற்றுக் கொள்ள நல்அருள் புரிவானாக.

')) said...

சிந்திப்பவர்களின் கடைசிப்புகலிடம் இஸ்லாமாகத்தான் இருக்க முடியும். அரைகுறைகளுக்கு கடைசி வரை புலம்பல்தான்.
இறைவன் நேர்வழியில் செலுத்த நாடியவர்களை யாராலும் வழி கெடுக்க இயலாது.

')) said...

I saw him in one of the real estate promo advt in a TV channel.

')) said...

Islam is not a Religion, that is the only path to reach God... without knowing anything do not brutally made any statements...

Madhan. M (a) Jafar Ahmed.

said...

நன்றி குத்தூஸ் அவர்களே, என் மனம் அமைதியாகத்தான் இருக்கிறது. கடவுள் விசயத்தில் எந்த தடுமாற்றமும் எனக்கு இல்லை. ஏன் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எம் முன்னோர்கள் மிக தெளிவாகவே 'அறிவியல் பூர்வமாகவும்' மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கூறி இருக்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் எங்களுக்கு வழிகாட்டவில்லை. பல ஞானிகளும், சித்தர்களும் பல வாழ்க்கை நெறிகளை கூறியே சென்றிருக்கிறார்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கே ஆன்மீக வழி காட்டியாக திகழ்ந்தது இந்தியா என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. இப்படி பல வாழ்க்கை நெறிகளை கூறிய ஞானிகள் அவற்றை ஒரு மதமாக மையப்படுத்தி கூறவில்லை. பிற்காலத்தில் ஒரு சிலரின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்து மதம் என்ற சொல். அதனை உருவாக்கியவர் கடவுள் அல்ல, மனிதன் தான். காரணம் மதம் உருவாக்கி மனிதனை மதம் பிடிக்க வைக்கும் தேவை கடவுளுக்கு இல்லை. ஆனால் இஸ்லாம் என்ற மதம் அல்லது மார்க்கத்தை கடவுளே உருவாக்கியதாக இஸ்லாமியர்கள் பெருமையுடன் கூறி கொள்வார்கள். மேலும் மதத்தை உயர்த்திபிடித்து பிற மத மக்களுக்கு சிறப்பு பெயரிட்டு இந்து சமயத்தில் எந்த வார்த்தையும் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் நிலை என்ன தெரியுமா. இஸ்லாமை பின்பற்றாதவன் எல்லாம் காபிர் அல்லது நஜஸ் என்ற சிறப்பு பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள், அவற்றிற்கு என்ன அர்த்தம் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் நீங்கள், இந்துக்கள் மக்களை சாதியால் பிரிக்கிறார்கள் அதனால் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். மதத்தால் பிரித்து மக்களை இழிவு படுத்துவதற்கும், சாதியால் பிரித்து இழிவு படுத்துவதற்கும் என்ன வித்தியாசம். பிறப்பில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதே எங்கள் வாழ்க்கை நெறி, குத்தூஸ் சார் நீங்கள் இந்து மதத்தை பின்பற்றாததால் நீங்கள் எனக்கு நண்பர்தான், ஆனால் நான் இஸ்லாமை பின்பற்றாததால் உங்களுக்கு நான் ஒரு காபிர் நண்பன். இதை மனிதன் கூறவில்லை, கடவுள் சொல்லி இருக்கிறார் குரானில், அப்படிதானே.
என்ன இலக்கணம் வைத்திருக்கிறீர்கள் கடவுளுக்கு. எனக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று கூறிக்கொண்டு பிறருக்கு சவால் விடும் தேவை கடவுளுக்கு இருக்கிறதா, நான்தான் அனைவரையும் படைத்தேன், ஆனால் எனது மதத்தை பின்பற்றாதவன் காபிர் என்று கடவுள் கூற முடியுமா. இன்னும் இப்படி பல விசயங்களை சொல்லிக்கொண்டேபோகலாம்.

குத்தூஸ், நான் மிக தெளிவாக இருக்கிறேன். எனது நாட்டில் இருப்பதை விட சிறந்த ஒன்று வெளி நாட்டில் இருந்து வரப்போவது இல்லை. அது மதமாக இருந்தாலும். என் முன்னோர்கள் வகுத்த வாழ்க்கை நெறிகளை மிக தெளிவாகவே புரிந்து வைத்து இருக்கிறேன். அவற்றை புரியாத சிலருக்கு அல்லது புரிய முயற்சி செய்யத சிலருக்கு வேண்டுமானால் அந்நிய வழி முறைகள் அவசியப்படலாம்.

உங்களுக்கும் (இஸ்லாமியர்களுக்கும்) நான்மட்டுமே உயர்ந்தவன் என்ற குறுகிய பார்வையை விட்டு அனைவருமே இந்த உலகில் சமம். மதத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் யாரும் இல்லை என்றுஎண்ணும் பரந்த மனதை அல்லா (கடவுள்) அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

M. JP

')) said...

M. JP அவர்களே, மீண்டும் வருகைக்கும் உங்களின் தெளிவான கருத்திற்கும் நன்றி.

உங்களின் கருத்தைப் பார்க்கும்பொழுது இஸ்லாம் சம்பந்தமாக ஊட்டப்பட்ட அறிவுடனேயே பேசுவதாக புரிந்துக் கொள்ள முடிகின்றது.

இஸ்லாம் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் கொண்டுவந்த மார்க்கம் இல்லை. இந்த உலகத்தில் பல்வேறு காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்களைப்போன்று பல்வேறு தீர்க்கதரிசிகள் வந்துள்ளார்கள் என்று நம்புவதும் இஸ்லாத்தின் ஒரு கொள்கையாகும்.

அப்படி வந்தவர்களில் நீங்கள் குறிப்பிட்ட ஞானிகள்,சித்தர்கள் கூட இருக்கலாம்! அவர்களெல்லாம் இஸ்லாத்தை போதிக்க வந்தவர்கள் என்ற ஆதாரம் எங்களிடம் இல்லையென்பதால் எங்களுக்கு கிடைத்த ஆதாரமான குர்ஆன், ஹதீஸ் போன்றவைகளை ஏற்றுக் கொண்டு அதன் வழி நடக்க முயற்சிக்கின்றோம்.

அதுமட்டும் அல்லாமல் எங்களுக்குக் கிடைத்த திருமறைக் குர்ஆன் என்ன கூறுகிறது என்றால், கடவுளால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல் போன்றவை அக்கால மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார்கள். அதாவது கடவுளின் வார்த்தையில் மனிதனின் ஊடுருவல் வந்துவிட்டது என்பதால் அவற்றைக் கலைந்து வேறொரு வேதத்தை அனுப்பியதாக கூறியதால்தான் நாங்கள் குர்ஆனை மட்டும் வேதமாக எடுத்துக் கொண்டு மற்றதையெல்லாம் விட்டுவிட்டோம். குர்ஆனில் மாற்றம் ஏற்படாமல், தான் பாதுகாப்பதாக இறைவனே கூறிவிட்டான் என்பதால் அதை பின்பற்றுவதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

சிலர் கூட அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்பார்கள்! திருமறைக் குர்ஆனை பாதுகாப்பதாகக் கூறிய இறைவன் ஏன் மற்றைய வேதத்தை பாதுகாக்கவில்லை?

ஒரு விசயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும், ஆரம்ப காலங்களில் இறைவன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தீர்க்கதரிசிகளை தனித்தனியாக அனுப்பி அவர்களுக்கு வேதத்தையும் வழங்கினான். இப்படியாக பல்வேறு மொழி பேசக்கூடிய சமுதாயம் பிரிந்து வாழ்ந்ததால் அவர்களுக்காக தனித்தனியாக தீர்க்கதரிசிகள் அனுப்பப்பட்டது.

இப்படியாக பல்வேறு சமுதாயங்கள் பெருகி அவர்களுக்குள் ஒரு தொடர்பு, நெருக்கம் மற்றும் மொழி பரிமாற்றம் போன்றவைகள் ஏற்படும்பொழுது அனைவருக்கும் சேர்த்து ஒரு தீர்க்கதரிசியும், வேத்தையும் வழங்கி அதை பொதுவானதாகவும், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவும், மாற்றத்திற்கு தேவையற்றதாகவும் அமைத்து அதை தான் பாதுகாப்பதாக கூறியதால்தான் இன்றைய காலத்திற்கு புதியதாக எந்த ஒரு தீர்க்கதரிசியும், வேதமும் வரவில்லை. (நீங்கள் எங்கிருந்தாலும் சுலபமாக உங்களிடம் தொடர்பு கொள்ள முடிகின்றதே?)

மற்றைய தீர்க்கதரிசிகளுக்கும், முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் நாங்கள் பார்ப்பதில்லை. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர அதாவது மற்றைய தீர்க்கதரிசிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பப்பட்டார்கள். ஆனால், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனைத்து சமுதாயத்திற்கும் தீர்க்கதரிசியாக அனுப்பப்பட்டார்கள்.

------
காபிர் என்றால் என்னவென்று அறியாததால் இப்படி கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன்? இது ஒன்றும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை கூறக்கூடிய வார்த்தை இல்லை. காபிர் என்பது இறைவனை நிராகரிப்போர் என்பது பொருளாகும்.

கீழ்காணும் குர்ஆனின் விளக்கத்தைப் பாருங்கள்.

நிச்சயமாக காபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 2:6)

காபிர் என்றால் இறைவனை நிராகரிபோர் என்றும், ஈமான்தாரி என்றால் இறைநம்பிகையாளர் என்றும் பொருள்படும். இதில் என்ன உயர்வு, தாழ்வு வந்துவிட்டது என்பதை தாங்கள் தான் விளக்கவேண்டும்.

------
நாம் நமது வாழ்கை முறைகளில் பல்வேறு அன்னிய வழிமுறைகளை பின்பற்றுபவரகளாகத்தான் உள்ளோம்.

மனிதர்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்று கொள்கைதான் உயர்வு, தாழ்வு கற்பிக்காத ஒன்றாகும்.

இப்படி அன்னியர் என்று பிரித்துப்பார்பதுதான் உயர்வு,தாழ்வை கற்பிக்கும். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ஊருக்குத்தான் உபதேசம், எனக்கு அல்ல என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

நன்றி.

')) said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in