Saturday, September 01, 2007

சிறந்த முஸ்லிம்

சகோதரர்களே!

நமது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக் கீழ் கண்டவாறு கூறுகின்றார்கள்:

"நமது எல்லாச் செயல்களும், நம்முடைய எண்ணங்களைப் பொருத்தே அமையும்"

நம்முடைய எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில், நமது செயல்களும் தூய்மையாக இருக்கும். ஆகவே, சகோதரர்களே நம்முடைய எண்ணத்தை தூய்மையானதாக ஆக்குவோம்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நான் சொல்லாத ஒன்றை வழிபாடாகச் செய்யாதீர்கள்"

ஆம், பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் மேன்மையான வணக்கமாக கொள்வது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை வழிபாடாக ஆக்கிக் கொண்டு வழி கெட்டு இஸ்லாத்திற்கு இழிவு ஏற்படுத்தும் செயலாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.

இறுதியாக, நபி (ஸல்) கூறுகின்றார்கள் :

"இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை தெளிவானது மற்றும் அனுமதிக்கப்பட்டவையும் தெளிவானது, அதைத்தவிர்த்து நாம் அறியாத நமக்கு சந்தேகத்திற்கு உரிய விசயங்களில் நாம் அதை தவிர்த்துக் கொள்ளல் நன்மையானது" என்பதை மிக தீர்க்கமாக அறிவித்துள்ளார்கள்.

சகோதரர்களே... யார் ஒருவர் இப்படிபட்ட விசயங்களை தங்களின் வாழ்கையில் பேணி நடக்கின்றார்களோ, அவர்கள் தங்களின் வாழ்நாளில் சிறந்த முஸ்லிமாக திகழ்வார்கள்.

0 comments: